நீங்க மன அழுத்தத்தை எப்படி கையாளுவீங்க.. இந்த புகைப்படத்தை உற்று பாருங்க.. சின்னதா ஒரு டெஸ்ட்
சென்னை: இந்த புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப்பாருங்கள். அப்படி பார்க்கும் போது, புகைப்படத்தில் எதனை நீங்கள் பார்த்தீர்கள் என்பதை வைத்து நீங்கள் யார், எப்படி பிரச்சனையை கையாளுவீர்கள் என்பதை கணித்துவிடலாம். இதுபற்றி டிக்டாக்கில் வந்த ஒரு ஆய்வினை பற்றி பார்ப்போம்.
நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் ஒரு புகைப்படத்தை பார்க்க சொல்வார்கள். அதில் பல விஷயங்கள் இருக்கும். எதை நீங்கள் முதலில் பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை முடிவு செய்வார்கள். பள்ளியில் குழந்தைகளுக்கு சேர்ந்த உடன் ஒரே பொருளை வைத்து என்ன தோன்றுகிறது என்று கேட்பார்கள்.அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் எளிதாக முடிவு செய்வார்கள். அதுபோல் நீங்கள் எதை பற்றி யோசிப்பீர்கள், எப்படி பிரச்சனையை கையாள்வீர்கள் என்பதை புகைப்படங்களை வைத்து உளவியல் ரீதியாக உங்களை சோதித்து அறிய முடியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள் இதில் பூனையுடன் கடல் தீவுகள் இருக்கும்.இதில் நீங்கள் கடற்கரை தீவை பார்க்கிறீர்களா அல்லது பூனையின் தலையை முதலில் பார்க்கிறார்களா என்பதைப் பொறுத்து, நீங்கள் உங்களுக்கு வரும் எதிர்வினைகள் மற்றும் சவால்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை அறிய முடியும்
இந்த பூனை புகைப்படம் TikTok இல் அதிகம் பகிரப்பட்டு வரும் விஷயமாகும். இதுபற்றி டிக்டாக்வாசிகள் கூறிய தகவல்களை இங்கே பார்க்கலாம். இந்த பூனைப் புகைப்படத்தை வைத்து நீங்கள் பக்குவம் உள்ளவரா மற்றும் மற்றவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்பவரா அல்லது தன்னை மற்றவர் விரும்புவதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள விரும்புவரா என்பதை அறிய முடியும்
இந்த புகைப்படத்தில் கடற்கரை தீவுகள் உங்களை முதலில் ஈர்க்கிறது. அதாவது பூனையை தவிர மற்ற விஷயங்களை பார்த்தால் , நீங்கள் மிகவும் சென்செட்டிவ்வான நபராக இருப்பீர்களாம்.. தனிமையை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் நட்பை ஆழமாக மதிப்பீர்கள். மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற, நீங்கள் சில நேரங்களில் உங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பீர்கள் அதாவது மற்றவர்களுக்காக, உங்கள் உண்மையான குணத்தை காட்டிக் கொள்ளாமல் இருப்பீர்கள். குறிப்பாக மன அழுத்தமான நிலையில் உறுதியற்ற மனநிலையில் இருப்பீர்களாம்..
அதேநேரம் நீங்கள் முதலில் பூனையை கவனித்தீர்கள் என்றால், அதாவது பார்த்த உடன் உங்களை பூனையின் தலை ஈர்க்கிறது என்றால், மற்றவர்களிடம் கோபத்தை அரிதாகக் காட்டும் ஒரு ஆளுமையாக நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்கிறார்கள். சங்கடமான சூழ்நிலைகளில் கூட, சிரித்தபடி கடந்து செல்வீர்களாம். ஏனெனில் உங்களுக்கு பொதுவாக சண்டை என்றாலே பிடிக்காது, அதில் இருந்து விலகியே இருக்க விரும்புவீர்களாம்.
அதே நேரம் உங்களுக்கு ஒருவேளை கோபம் வரும் அளவிற்கு மோசமான சூழல் வந்தால் கடுமையாக கோபப்படுவீர்களாம். எப்படி என்றால் யாராவது உங்களை கடுமையாக எரிச்சலூட்டினால் அல்லது லிமிட்டை மீறி செயல்படும் போதுதான் கோபம் வரும். அப்படி வரும் கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்குமாம். இந்த வகையானவர்கள் பொதுவாக முதிர்ச்சியடைந்தவர்களாக இருப்பார்களாம். பெரும்பாலும் அப்போது நடந்த சூழ்நிலைகளை, தனக்கு எதிராக உள்ளவர்களின் (மற்றவர்களின்) கண்ணோட்டத்தில் பார்ப்பார்களாம். தேவைப்பட்டால் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளவும் தயங்க மாட்டார்களாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications