மேட் இன் தமிழ்நாடு.. சென்னையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ஹூண்டாய் கார்.. மாஸ் காட்டும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் ஹூண்டாய் உற்பத்தி தொழிற்சாலையில் புதிய ரகம் கார் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது.ஆனா அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது.

The first Made-in-India Hyundai Exter rolled out of assembly line from its Sriperumbudur

அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டார் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான்.கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது.

கார் உற்பத்தி: தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் நிலையில்தான் தற்போது இந்த முதலீடும் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ளது.ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் ஹூண்டாய் உற்பத்தி தொழிற்சாலையில் புதிய ரக கார் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹூண்டாய் எக்ஸ்டெர் கார் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து அசெம்பிளி லைனில் வெள்ளிக்கிழமை வெளிவந்தது.

முதலீடு அதிகரிப்பு: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது.

மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே 2022ம் வருடம் முழுக்க தமிழ்நாடு மொத்தமாக 60+ நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. மொத்தமாக இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது.முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு அடுத்த வருடம் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குவியும் முதலீடு: சமீபத்தில்தான் ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.இந்த நிலையில் தற்போது ஹூண்டாய் முதலீடும் வந்துள்ளது.

The first Made-in-India Hyundai Exter rolled out of assembly line from its Sriperumbudur

மின்சார வாகனங்கள்தான் எதிர்காலம். இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.

அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும் இந்த நிலையில்தான் தற்போது ஹூண்டாயும் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+