சாணக்யா கணிப்பில் உள்ள தவறு.. தவெகவிற்கு வாக்கு சதவீதம் vs சீட்டில் உள்ள முரண்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. அந்த வகையில் சாணக்யா ஸ்ட்ராட்டஜி எக்சிட் போலும் திமுகவே வெல்லும் என்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணி 145- 160 இடங்களை வெல்லும், அதிமுக கூட்டணி 50- 65 இடங்களை வெல்லும், தவெக 13-18 இடங்களை வெல்லும், மற்றவை 5-8 இடங்களில் வெல்லும் என்று கணிப்பில் கூறியிருக்கிறது. தவெகவின் வாக்கு சதவீதமும், அந்த கட்சி வெல்லும் என்று கூறப்படும் இடங்களிலும் முரண்பாடு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்று வெளிவ்ந்த அனைத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணி மீண்டும் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்கின்றன (குறைந்தபட்சம் 122 முதல் அதிகபட்சம் 160 இடங்கள் வரை). பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 67 முதல் 81 இடங்கள் வரை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The Flaw in Chanakya s Projections The Discrepancy Between TVK s Vote Share and Seat Tally

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்துள்ளது, விஜய் தலைமையிலான தவெக, 14 முதல் 19 இடங்கள் வரை பிடித்து ஆச்சரியமான தொடக்கத்தைத் தரும் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் 24 இடங்கள் வரை கூட தவெக வரும் என்று கூறுகின்றன.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 4 முதல் 7 இடங்கள் வரை பெற்று, முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு இருப்பதாகவும் சில கணிப்புகள் கூறுகின்றன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுக கூட்டணி 137-150 இடங்களிலும், அதிமுக கூட்டணி 66 முதல் 79 இடங்களிலும், தவெக 12-17 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 3 முதல் 7 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் சாணக்யா ஸ்ட்ராட்டஜி எக்சிட் போல் கணிப்பில் தவெக 13-18 இடங்களை வெல்லும் என்று கூறியிருந்தாலும் வாக்கு சதவீதமாக 13 முதல் 15 சதவீதம் என்றே கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகையில், ஒரு தொகுதியில் 35 சதவீதத்திற்கு மேல் எடுத்தால் தான் வெற்றி வாய்ப்பு என்பது இருப்பதாக அர்த்தம்.. அவேரஜ் ஆக 16 சதவீதம் என்கிற நிலையில், சீட் 13 முதல் 18 என்பது வாய்ப்பே இல்லை.. ஒருவேளை தவெக 20 சதவீதம் வாக்குகள் பெற்றால் 2 அல்லது 3 தொகுதிகளை பெறலாம்..

ஒருவேளை தவெக 13 முதல் 18 தொகுதிகளில் வெல்லும் என்றால், அவர்கள் ஆவரேஜ் ஆக 25 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.. 22 சதவீதம் தான் மாற்றங்களுக்கான சதவீதம் ஆக பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவின் வாக்கு சதவீதம் தொடர்பாக சாணக்யாகவின் கணிப்பு டேலியாகிறது. ஆனால் தவெக கணிப்பிற்கும் வெல்லும் என கூறப்படும் இடங்களுக்கும் டேலியாகவில்லை.. " என்று கூறியுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+