அரசு விடுதிகளில் இனி வாய்க்கு ருசியான சாப்பாடு! கோழி குருமா, மட்டன் குழம்பு என லிஸ்ட் பெரிசா போகுது!
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் இயங்கும் 1,354 விடுதிகளில் 18 ஆண்டுகளுக்கு பிறகு உணவுப்பட்டியல் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி இனி வாரம்தோறும் செவ்வாய்கிழமை அன்று வெஜிடபிள் பிரியாணியும், புதன்கிழமை அன்று கோழி குருமா, மட்டன் அல்லது சிக்கன் குழம்பும் விடுதி மாணாக்கர்களுக்கு கொடுக்கப்படும்.
எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகள் வழங்கப்படவுள்ளன என்ற விவரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1,354 விடுதிகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் 1,354 கல்வி விடுதிகள் இயங்கி வருகின்றன. விடுதிகளில் 86,514 மாணவ/மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். விடுதி மாணாக்கர்களுக்கு காலை/ மதியம்/ இரவு என 3 வேளைகளிலும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

18 ஆண்டுகளுக்கு பிறகு
மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாராந்திர உணவுப்பட்டியல் பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, 18 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதி பிறந்த நாளான இன்று முதல் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பள்ளி / கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ / மாணவியருக்குத் திருத்தம் செய்யப்பட்ட உணவுப்பட்டியலின்படி புதிய உணவு வழங்கப்பட உள்ளது.

86,514 மாணவ மாணவிகள்
இத்திட்டத்தால் 86,514 மாணவ/மாணவியர்கள் பயனடைவர். மேலும், புதிய உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்பட உள்ளதால் விடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை அதிகரிக்கும். இதனால் மாணாக்கர்களின் கல்வி மற்றும் உடல் நலன் மேம்படும்.

உணவுப் பட்டியல்
திங்கள்கிழமை காலை: சேமியா கிச்சடி, தக்காளி சட்னி (சாம்பார் சேர்த்துக்கொள்ளலாம்).
திங்கள்கிழமை மதியம்: சாதம், சாம்பார்,இருவகை பொரியல், ரசம், மோர், முட்டை (அல்லது) சாதம், சாம்பார், 1 பொரியல், ரஸம், மோர், முட்டை மசாலா
திங்கள்கிழமை இரவு: சப்பாத்தி, குருமா

காய்கறி பிரியாணி
செவ்வாய்கிழமை காலை: பூரி, மசால்
செவ்வாய்கிழமை மதியம்: காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை
செவ்வாய்கிழமை இரவு: இடியாப்பம், குருமா (அல்லது) காய்கறி கூட்டு (Vegetable Stew)

கோழி குருமா
புதன்கிழமை காலை: இட்லி, சாம்பார் , சட்னி
புதன்கிழமை மதியம்: சாதம், ஆட்டிறைச்சி / கோழி குருமா (அல்லது) மட்டன் / சிக்கன் குழம்பு, பொரியல், மோர்
புதன்கிழமை இரவு: காய்கறி புலாவ், குருமா. (ரைத்தா சேர்த்துக்கொள்ளலாம்)

ஊத்தாப்பம்
வியாழக்கிழமை காலை: இடியாப்பம், பட்டாணி குருமா (அல்லது) தேங்காய் பால்.
வியாழக்கிழமை மதியம்: தக்காளி சாதம் (அல்லது) லெமன் சாதம் (அல்லது) தயிர் சாதம், உருளை பொரியல், முட்டை
வியாழக்கிழமை இரவு: ஊத்தாப்பம், சட்னி, சாம்பார்

காரக்குழம்பு
வெள்ளிக்கிழமை காலை: பொங்கல் (அல்லது) வரகு பொங்கல் (அல்லது) தினை அரிசி பொங்கல், கத்தரிக்காய் கொத்சு, வடை.
வெள்ளிக்கிழமை மதியம்: சாதம், காரக்குழம்பு , பொரியல் , ரசம், மோர், முட்டை. (பொரியலுக்கு பதிலாக ஒரு கூட்டு வகையை சேர்த்துக் கொள்ளலாம்)
வெள்ளிக்கிழமை இரவு: கோதுமை தோசை, தக்காளி சட்னி

புதினா சாதம்
சனிக்கிழமை காலை: ரவா கிச்சடி, தேங்காய் சட்னி
சனிக்கிழமை மதியம்: புதினாசாதம் (அல்லது) காரட் சாதம் (அல்லது) கறிவேப்பிலை சாதம், அப்பளம், முட்டை (பருப்பு துவையல் சேர்த்துக்கொள்ளலாம்)
சனிக்கிழமை இரவு: சாதம், சாம்பார், பொரியல், ரசம்

தக்காளி சாதம்
ஞாயிற்றுக்கிழமை காலை: தோசை (அல்லது) நவதானிய தோசை, சாம்பார், சட்னி
ஞாயிற்றுக்கிழமை மதியம்: சாதம், முட்டை குருமா, ரசம், மோர்
ஞாயிற்றுக்கிழமை இரவு: தக்காளி சாதம் (அல்லது) சாம்பார் சாதம், வறுவல்












Click it and Unblock the Notifications