ரோலிங் சேர்! முகத்தில் மாஸ்க்! தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்
சென்னை: தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வருகை தந்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் கூட்டத்திற்கு விஜயகாந்த் வந்துள்ளார். கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ரோலிங் சேரில்.. மாஸ்க் அணிந்தபடி அவர் கூட்டத்திற்கு வந்தார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தது. முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியது. அதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக 1 வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்.. முழுமையாக உடல்நிலை குணமாகி அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
போட்டோ வெளியிட்டார்: இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை எல்லாம் உடைக்கும் வகையில், வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்டு உள்ளார்.
பரவிய வதந்திகள்: சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
அங்கே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை கொடுத்தது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கற்பனைகளை, சோகமான போஸ்டுகளை போட தொடங்கினர். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
இன்று மீட்டிங்: இந்த நிலையில் சென்னையில் இன்று கூடுகிறது தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த் உரையாற்றுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் பிரேமலதா பேசுவார். விஜயகாந்த் அமர்ந்து இருப்பார். தொடக்கத்தில் வணக்கம் சொல்லுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் அவர் பேச வாய்ப்புகள் குறைவு.
2024 லோக்சபா தேர்தல் பணிகள், கூட்டணி, கட்சியின் அடுத்தகட்ட நகர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. முக்கியமாக தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. பாஜக, அதிமுக கூட்டணியில் இல்லை. சிகிச்சைக்கு பின் விஜயகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications