#1YEAROFCMSTALIN.. ட்விட்டரை தெறிக்க விடும் உடன் பிறப்புகள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்..!
சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் #1YEAROFCMSTALIN என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியைப் பிடித்த சாதனையை அதிமுக செய்தது.
இடத்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஓராண்டு நிறைவு
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நூற்று ஐம்பத்து ஒன்பது இடங்களில் அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான ஸ்டாலின் தமிழக முதல்வராக மே 7-ஆம் தேதி பதவியேற்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

தாயாரிடம் ஆசி
திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்று காலை தனது தாயார் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுகவினர் உற்சாகம்
தொடர்ந்து சட்ட சபையில் உரையாற்ற வந்த முதல்வருக்கு திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் முன்னதாக ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் நடிகர்கள் கவிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#1YearOfCMStalin ட்ரெண்ட்
இந்நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதையொட்டி ட்விட்டரில் #1YearOfCMStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுக அரசின் ஓராண்டில் நூற்றாண்டைக் காணும் வரலாற்றுச் சாதனைகளை திமுகவினர் பட்டியலிட்டி திமுக அரசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவினர் வாழ்த்து
குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என திமுக அரசின் சாதனை சமூக வலைதளத்தில் திமுகவினரால் பட்டியலிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அளவில் #1YearOfCMStalin என்ற ஹேஷ்டே ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications