பிரதமர் வருகை: டுவிட்டரில் டிரெண்டாகும் #GoBackModi... #TNWelcomesModi!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வருவதால் #GoBackModi டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

#TNWelcomesModi என்ற ஹேஸ்டேகும் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்துக்கு பிரதமரை வரவேற்று பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.

ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி.சென்னை வருகை

பிரதமர் மோடி.சென்னை வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். பிரதமர் நரேந்திர மோடி. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுதான் முதல் முறையாகும் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்

திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்

இந்த விழாவில் பிரதமர் சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டதை தொடங்கி வைக்கிறார். மேலும் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகியவை உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அர்ஜூன் போர் பீரங்கி அர்ப்பணிப்பு

அர்ஜூன் போர் பீரங்கி அர்ப்பணிப்பு

கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள 'டிஸ்கவரி கேம்பஸ்' வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#GoBackModi டிரெண்டிங்

#GoBackModi டிரெண்டிங்

பொதுவாக பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் நேற்று மதியத்தில் இருந்தே #GoBackModi டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பிரதமரை வரவேற்கும் விதமாக #TNWelcomesModi என்ற ஹேஸ்டேகும் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்துக்கு பிரதமரை வரவேற்று பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+