Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகா சிவராத்திரி.. 15 மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு இந்து முன்னணி வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை பொறுத்தவரை மற்ற சிவாரத்திரிகளைவிடவும் விஷேசமானது. மாசி மாதத்தில் சிவனுக்கு உகந்த சிவாரத்திரி நாளை மகா சிவாரத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது .

The Hindu munnani has requested the Tamil Nadu government to provide a holiday for Maha Shivratri

சிவாரத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு அன்று வரும்.. சிவனடியார்கள் பலரும் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்..

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்வார்கள். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்வார்கள்..

இதனிடையே மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது. சிவராத்திரி பண்டிகையை யொட்டி ஏராளமான மாநிலங்களில் விடுமுறைவிடப்படுகிறது. தமிழகத்திலும் விடுமுறைவிடப்படும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த முறை மார்ச் 8ம் தேதி அன்று மகா சிவாரத்திரி வருகிறது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சிவபெருமானை நினைத்து இரவு முழுக்க விழித்து, பக்தர்கள் விரதம் இருந்து உடலையும், மனதையும் செம்மையாக்க கொண்டாடப்படும் விழா மகா சிவராத்திரி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு 'சிவாலய ஓட்டம்' என்ற பெயரில் 110 கிலோ மீட்டர் தூரமுள்ள 11 சிவாலயங்களுக்கு ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் ஓடி சென்று சிவபெருமானை வழிபடுவர்.

இவ்விழா சிவாலய ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் இத்திருவிழா வெகு விமரிசையாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடி ஈசனை தரிசிக்கின்றனர்.இது போன்றே தமிழகத்தில் ஆன்மிக அமைப்புகளும், மடங்களும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கூட மகா சிவராத்திரி விழாவை தமிழக கோவில்களில் நடத்தி வருகிறது. இப்படி ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளிற்காக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளன.

தமிழகத்திலும் கூட பக்தர்கள் எந்தவொரு சிரமமும் இன்றி சிவ தலங்களுக்கும், குலதெய்வ கோவில்களுக்கும் சென்று இறைவனை தரிசிக்க தமிழக அரசு மகாசிவராத்திரி திருநாளான மார்ச் 8-ந் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்க வேண்டும். பக்தர்கள் புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் " இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+