Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேராசிரியர் அன்பழகன் வீட்டில் நடந்த துயர நிகழ்வு! நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி!

3 முக்கிய நபர்களின் மரணச் செய்தியால் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வருத்தம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாளில் 3 முக்கிய நபர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த நிகழ்வு முதலமைச்சர் ஸ்டாலினை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலையில் நடிகர் மயில்சாமி மரணம் அடைந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் முன்னாள் அமைச்சரும், தஞ்சை மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடியுமான உபயத்துல்லா மரணமடைந்த தகவல் முதல்வருக்கு வந்தது.

இவர்களுக்கு உருக்கமுடன் இரங்கல் குறிப்பு வெளியிட்ட சிறிது நேரத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடன் பிறந்த சகோதரர் க.மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி முதல்வருக்கு கிடைத்தது.

ஓய்வு நாள்

ஓய்வு நாள்

முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஞயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை என்ற வேறுபாடு பார்க்காமல் எல்லா நாட்களையும் ஒரே நாளாக எண்ணி ஓடிக் கொண்டிருக்கக் கூடியவர். அந்த வகையில் இன்று கூட ஆய்வுக்கும், குடும்ப நிகழ்வு ஒன்றுக்கும் புறப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு நடிகர் மயில்சாமியின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மயில்சாமி திமுகவை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் மறைமுகமாக திமுக ஆதரவாளராக வலம் வந்தவர். அதுமட்டுமல்ல கருணாநிதி மீது அளவுகடந்த பற்றி வைத்திருந்தவர்.

மிகுந்த வருத்தம்

மிகுந்த வருத்தம்

ஊடக விவாதங்களிலும் அதிமுகவுக்கு எதிராக பேசக்கூடியவர். இதனால் மயில்சாமியின் மறைவு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தான் உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வைத்தார். இதனிடையே தஞ்சையில் இருந்து முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைந்த தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டதும் அதற்கும் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 பேராசிரியர் தம்பி

பேராசிரியர் தம்பி

இதனிடையே மூன்றாவதாக மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் நடந்த துயர நிகழ்வு குறித்தும் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் அன்பழகனின் உடன்பிறந்த தம்பி க.மணிவண்ணன் காலமான செய்தியறிந்து உடனடியாக தாமே நேரடியாக புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நினைவேந்தல்

நினைவேந்தல்

முன்னதாக தனது மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி அண்மையில் காலமான நிலையில் அவரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+