சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: வேல்ஸ் கல்வி நிறுவனம் ரூ.300 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை ரெய்டில் தெரியவந்துள்ளது.

வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சினிமா திரைப்படத் தயாரிப்பாளருமாக இருப்பவர், ஐசரி கணேஷ்.

<div class=

" title="
The Income Tax department finds 300 crores in Vels Ishari K. Ganesh
" />
The Income Tax department finds 300 crores in Vels Ishari K. Ganesh

சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அரசியல் நையாண்டியை மையமாக கொண்ட, எல்கேஜி என்ற திரைப்படத்தை கூட வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது.

நீயும் நானுமா.. 68 வயது வைத்திலிங்கத்திற்கு எதிராக 29ஐ களம் இறக்கிய ரங்கசாமி!

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, கடந்த 3 நாட்களாக ஐசரி கணேசுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.

சென்னையில் உள்ள ஐசரி கணேஷ் இல்லம், பல்கலைக்கழகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 3 இடங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.300 கோடி வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஐசரி கணேஷிடம் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Income Tax department has knocked on the doors of Vels University, belonging to the group and its founder chancellor Ishari K. Ganesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X