“ஜோசப் விஜய் எனும் நான்..!” ராகுல் காந்தியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்த தவெக! உற்று நோக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. நாளை காலை 11.30 மணியளவில் விஜய் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் இந்த விழாவுக்கு ராகுல் காந்திக்கு தவெக அழைப்பு விடுத்திருக்கிறது. இது திமுக தரப்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

தமிழக அரசியலில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக விஜய்யின் தேர்தல் வெற்றி, அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Rahul Gandhi

தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறவில்லை. எனவே, பெரும்பான்மைக்கு கூட்டணி கட்சிகளை தவெக நாடியுள்ளது. காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட நிலையில், காங்கிரஸ் ஓகே சொல்லியிருக்கிறது. இது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தது. இதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு கட்சிகளின் நிர்வாகிகள் மட்டத்தில் பஞ்சாயத்துகள் வெடித்திருந்தன. இப்படியாக தேர்தல் நடந்து முடிந்தது.

இப்போது விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பதால், திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாகவும் திமுகவினர் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் நாளை காலை 11.30 மணிக்கு விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. "பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விஜய், ராகுல் காந்தியை அழைத்துள்ளார். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த உடனேயே, ராகுல் காந்தியின் வருகை உறுதி செய்யப்படும்" என காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி வந்தால், திமுக-காங்கிரஸ் இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவரும் விஷயங்களுக்கு திமுக ஆதரவு அளிக்காது. இந்தியா கூட்டணியிலும் திமுக தொடருமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கும்.

இதெல்லாம் முன்னேரே தெரிந்துதான் என்னவோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் சென்றுவிட்டாரோ! என்று பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+