Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் வெடித்த கிளாம்பாக்கம் பிரச்சினை? எதிர்க்கட்சி வாயை அடைக்கிறதா ஆளும் கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் பெரிய விவாதமாக எழுந்துள்ளது.

ஒரு பக்கம் கோயம்பேடு பேருந்து நிலையம் ஈ காக்காய் இல்லாமல் வெறிச்சோடி போய் உள்ளது. இன்னொரு பக்கம் புதியதாகத் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் பிரச்சினையாக மாறி இருக்கிறது.

the Kilambakkam bus stand controversy on going

அந்தப் பிரச்சினையை இன்று சட்டமன்ற கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளப்பினார். 'கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சினைகளைச் சரி செய்து தரவேண்டும்' என்றார்.

உடனே அதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, 'கடந்த ஆட்சியில் 30% வேலைகள்தான் முடிக்கப்பட்டு இருந்தன. மீதம் உள்ள 70% வேலைகளை இந்த அரசுதான் செய்து முடித்துள்ளது. அதன்பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளித்தார்.

அமைச்சர் சொல்வதைப் போல் கட்டுமான பணிகள் 70% முடிந்திருக்கலாம். ஆனால், டீ, காபி குடிக்கக் கூட கடைகள் இல்லை என்றே மக்கள் புகார் சொல்கிறார்கள்.

the Kilambakkam bus stand controversy on going

அந்தப் பேருந்து நிலையத்தில் உணவகம் அமைக்கவோ அல்லது பொதுமக்கள் தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கோ வசதிகளே இல்லை என்றே மக்கள் சொல்கிறார்கள்.

அந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள பாதி கடைகள் பூட்டப்பட்டே கிடக்கின்றன. அப்படி உள்ள போது வெறுமனே பேருந்து நிலையத்தின் கட்டட வேலைகளை மட்டும் முடித்துத் திறந்துவிட்டால் போதுமா?

வண்டலூரிலிருந்து மக்கள் கிளாம்பாகம் செல்வதற்கு முடியாமல் சில தினங்கள் கொந்தளித்ததை அனைத்து ஊடகங்களும் காட்டி இருந்தன. அது மட்டும் இல்லை.

கடந்த இரண்டு நாள்கள் முன்னதாக இரவு 2 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குழுமி இருந்த பயணிகள் அரசுக்கு எதிராகக் கொந்தளித்தனர். திரும்பிய திசை எல்லாம் மக்கள் கூட்டம். பல மணிநேரமாகக் காத்திருந்தும் பேருந்து வசதிகள் சரியாகச் செய்து தரப்படவில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்களைத் தெரிவித்தனர்.

the Kilambakkam bus stand controversy on going

ஒரு பெண்மணி தனது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாகவும், காலையில் போய் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும். உணவுகூட சரியாகக் கிடைக்காமல் 8 மணிநேரம் காத்திருக்கிறேன் என்று கதறினார்.

இன்னொரு பெண், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் சர்க்கரையின் அளவு 530 ஆக உள்ளதாகவும் இருதய நோயாளியான தன் கணவருடன் பேருந்து கிடைக்காமல் கால்கடுக்கப் பல மணிநேரமாக அவதிப்பட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு கல்லூரி மாணவி, பேருந்து நிலையம் கட்டுமானம் அழகாக உள்ளது. தரமாக உள்ளது. ஆனால் பேருந்துகள் எங்கே? இவ்வளவு பெரிய பேருந்து நிலையத்திற்கு இதுவரை 2 பேருந்துகள்தான் வந்துள்ளது. எங்கே போனது பேருந்துகள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

the Kilambakkam bus stand controversy on going

வயதான பயணி ஒருவர், மாயவரம் போகவேண்டும் நான்? எங்கே இருக்கிறது பேருந்து? ஒரு பேருந்தைக் காட்டுங்கள் என்று சவால் விட்டார். அதேபோல் நடுத்தரவயது உள்ள பயணி, மக்கள் கொந்தளித்தால் ஆட்சியாளர்கள் தாங்கமாட்டார்கள் என்று கர்ஜித்தார்.

கடந்த 2 தினங்கள் முன்னதாக நள்ளிரவில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் மக்கள் இந்தக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரத்திற்குப் பேருந்து கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். பொறுத்திருந்து பொறுத்திருந்து பார்த்த பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வேறொருவர் யாரைக் கேட்டு பேருந்து நிலையத்தை மாற்றினார்கள்? இது கத்திரிக் காயா? மாங்காயா? என்று பொரிந்து தள்ளினார்.

the Kilambakkam bus stand controversy on going

ஆக, திறக்கப்பட்டது முதல் இன்றுவரை மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என்பதையே பயணிகள் தொடர்ந்து கூறி வந்தனர். அதை உணர்ந்துதான் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்று நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் சேகர்பாபுவும் அடிக்கடி சென்று ஆய்வு நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி சின்ன சின்ன பிரச்சினைகள் என்று சட்டமன்றத்தில் பேசுகிறார். ஆனால், மக்கள் அடிப்படையாகப் பேருந்துகளே வரவில்லை என்று புகார் சொல்கிறார்கள். மேலும் சரியாக இணைப்பு வசதி இல்லை என்கிறார்கள்.

ஒரு பயணி பொங்கல் பண்டிகை அன்று இரவு 8 மணிக்குப் பேருந்து நிலையத்திற்குள் வந்ததாகவும் விடியற்காலை 5 மணிக்குத்தான் ஊருக்குச் செல்ல பேருந்து கிடைத்ததாகவும் அதே நிலைதான் தற்போதும் தொடர்கிறது. இதுவரை பேருந்து வசதி சரியாகச் செய்யப்படவில்லை என்கிறார்.

the Kilambakkam bus stand controversy on going

பொங்கல் பண்டிகை முடிந்தே ஒரு மாதம் ஆகப் போகிறது. இப்போதும் அதே நிலையே தொடர்கிறது என்கிறார் இந்தப் பயணி. அப்படி என்றால் ஒரு மாதமாக எந்த முன்னேற்றமும் இல்லையா? அதற்கு அரசு தரப்பில் எந்த விளக்கமும் இல்லையா?

இவ்வளவு பிரச்சினைகள் களத்தில் உள்ளபோது, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் திடீரென்று எழுந்த முதல்வர் ஸ்டாலின், 'சின்ன சின்ன பிரச்சினை எல்லாம் இல்லை. பெரும் பெரும் பிரச்சினைகள் எல்லாம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்துவிட்டுத்தான் பேருந்து நிலையத்தைத் திறந்துள்ளோம். ஆகவே, இந்தப் பிரச்சினையை இத்துடன் முடியுங்கள்' என்று கூறி இருக்கிறார்.

சட்டசபையில் இத்துடன் பிரச்சினை முடிந்துவிடலாம். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினை எப்போது முடியும்? அதுதான் பல ஆயிரம் மக்களின் கேள்வியாக உள்ளது.

the Kilambakkam bus stand controversy on going
the Kilambakkam bus stand controversy on going
the Kilambakkam bus stand controversy on going
the Kilambakkam bus stand controversy on going
the Kilambakkam bus stand controversy on going
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+