என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்!
காணாமல் போய் திரும்பி வந்த நாய்க்கு பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தமிடுகிறார்.
Recommended Video

சென்னை: என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா? பப்லு என்ற நாய்க்குத்தான்!
இந்த பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த பப்லுவை திடீரென காணாமல் தவித்து போய்விட்டார் அந்த பெண். தன்னையே சுற்றி சுற்றி வந்த பப்லு எங்கே போனதோ, யாரிடம் சிக்கி இருக்கிறதோ, என்ன ஆனதோ என தெரியாமல் கண்கலங்கியே இருந்துவந்துள்ளார்.

"பப்லுவை யாராவது பார்த்தீங்கன்னா என்கிட்டயே கொண்டு வந்து கொடுத்திடுங்கன்னு" சமூகவலைதளங்களில் தகவலும் அளித்தார். கூடவே பப்லுவின் கெத் லுக்குடன் கூடிய போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் எந்த பதிலுமே இல்லை.. பப்லுவும் கிடைக்கவே இல்லை. தற்போது 57 நாட்கள் கழித்து பப்லு கிடைத்துவிட்டாள்.
அதனை கண்டுபிடித்து உரிமையாளரான அந்த பெண்ணிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். காணாமல் போன பப்லுவை பார்த்தவுடன் அந்த பெண்ணின் சந்தோஷம், ஆனந்தம், கண்ணீர் என மாறி மாறி வருகிறது. பப்லுவை கட்டியணைத்து முத்தமழை பொழிகிறார். "என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.." என்று சொல்லும்போது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது
பதிலுக்கு பப்லுவும் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இந்த இரு உள்ளமும் இணையும் நெகிழ்ச்சி காட்சியை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பப்லுவை தன்னிடமே ஒப்படைத்துவிட்ட நபர்களுக்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications