அழகு நிலையம் முதல் பேக்கரி வரை.. தொழில் உரிம கட்டணம்.. சென்னையில் எந்த தொழிலுக்கு எவ்வளவு?
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணம் அடியோடு மாறி உள்ளது. அழகு நிலையம், போட்டோ ஸ்டூடியோ, மருந்தகம், ஓட்டல், உணவகம், பேக்கரி, கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஜூஸ் கடை உள்பட பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு தொழில் உரிமம் பெறுவதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின் படி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள், தொழில்வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் முடியும். இதன்படி சென்னை மாநகராட்சியில், தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திட வேண்டும்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை மாநகராட்சி மாற்றியமைத்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தொழில் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 முதல் ரூ,30,000 என்கிற வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பேக்கரிகளுக்கு தொழில் உரிமம் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரையிலும், அழகு நிலையங்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.6,000 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சைக்கிள் விற்பனை கடைகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையிலும், பல்பொருள் அங்காடி நிலையங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், சலூன்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.10,000 வரையிலும், ஹெல்மெட் கடை, ஜூஸ் கடை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையிலும் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
போட்டோ ஸ்டூடியோவுக்கு ரூ.3,000-ல் இருந்து ரூ.10,000, நகைக் கடைகளுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.20,000, துணிக்கடைகளுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000, திருமண மண்டபங்களுக்கு ரூ.10,000-ல் இருந்து ரூ.30,000 வரையும் கட்டணம் உரிமக் கட்டணத்தை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதேபோல் திருத்தப்பட்ட தொழில் வரியின் படி, 6 மாத கால நிகர வருவாயில் மாத வருமானம் ரூ.21 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு தொழில் வரி இல்லை. ரூ.21,001 முதல் - ரூ.30,000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.135-ல் இருந்து ரூ.180-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.30,001-ல் இருந்து ரூ.45,000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.430-ஆக தொழில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.45,001-ல் இருந்து ரூ.60,000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.690-ல் இருந்து ரூ.930-ஆக தொழில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதநேரம் ரூ.60,001-ல் இருந்து ரூ.75,000 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எப்போதும் உள்ளது போல ரூ.1,025-ம், ரூ.75,000-க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு பழைய நடைமுறையின் படி ரூ.1,250 ஆக தொழில் வரியாக வசூலிக்கப்பட உள்ளது. திருத்தியமைக்கப்பட்ட தொழில் வரியின் படி, அரையாண்டுக்கான வரி ரூ.45-ல் இருந்து ரூ.240 வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications