ஈஷா மின் மயானத்துக்கு எதிர்ப்பு..போலி அட்ரஸ் கொடுத்த மனுதாரர்? கோர்ட்டில் பரபர வாதம்..முக்கிய ஆர்டர்
சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ஈஷா மையத்தில் ஈஷா அறக்கட்டளை - காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கும் பணிகளை ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு இக்கரை பொலுவம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மின் தகன மேடை கட்டுமானத்தை அகற்றக் கோரியும், இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள இக்கரை பொலுவம்பட்டி கிராமம், யானைகள் வாழ்விடமாக உள்ளது.
மின்தகன மேடை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தகன மேடை அமைக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. சட்டப்படி, குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 90 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் மயானங்கள் அமைக்கப்படவேண்டும். இதை மீறும் வகையில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைக்கப்படுகிறது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தகன மேடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் வசிப்பதாகக் கூறியுள்ள மனுதாரர், இருட்டுப்பள்ளம் எனும் பகுதியில் வசிப்பதாகவும், மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு ஷெட் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு எவரும் வசிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எனவும், அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஈஷா தரப்பு, இவர்கள் போலி முகவரியை சமர்ப்பித்தள்ளதாகவும், மனுதாரர் கூறுவது போல சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இல்லை எனவும், முறையாக அனுமதி பெற்று தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மின் தகனமேடை காரணமாக அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் ஆட்சேபம் கேட்காமல் தகன மேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஈஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மின் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும், நவீன முறையில் எல்.பி.ஜி. எரி வாயு மூலம் உடல்கள் எரியூட்டப்படுவதாகவும், அதிக உயரத்தில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications