கொரோனா குமார் பட விவகாரம்.. நடிகர் சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை திரும்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 9 கோடியே 50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு, 4 கோடியே 50 லட்ச ரூபாய் முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டில் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், "கொரோனா குமார்" படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications