Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 மணி நேரம் வேலை செய்யும் மனைவி.. கணவன் சொத்தில் பங்குண்டு.. ஹைகோர்ட் நச் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் நிலையில் இல்லத்தரசிகள் 24 மணி நேரம் ஓயாமல் வேலை செய்தவதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கணவன் சம்பாதித்த சொத்தில் மனைவிக்கு பங்கு கொடுக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலங்காலமாக வெளியில் சென்று வேலை பார்த்துவிட்டு வரும் ஆண்கள், வீட்டில் அன்றாட வேலை பார்க்கும் பெண்களை இரண்டாம் பட்சமாகதான் பார்க்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவர்தான் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

The Madras High Court has said that the wife has equal rights in the matter of the property earned by the husband

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது, "குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலையாகும். அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது.

கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது.

குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது.

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள். கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது.

குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+