நடிகர் எஸ்வி சேகர் ஹேப்பி.. தண்டனையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.. என்ன நடந்தது?
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில, எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
வழக்கு என்ன: கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபர்த்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து விசாரணை முடிவடைந்து அண்மையில் தீர்ப்பளித்த எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல், "புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கபட்டிருக்கிறது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான அமைதியை சீர் குலைத்தல், தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தான் வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தான் மறு உத்தரவு வரும் வரை எஸ்வி சேகருக்கான தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது..












Click it and Unblock the Notifications