பிரேமலதா, ஓபிஎஸ்ஸை.. கடைசி வரை முயன்றும்.. மோடி உடன் மேடையில் ஏற்ற முடியலையே.. நொறுங்கியது
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மேடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகத் தோன்றினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓ பன்னீர்செல்வம், தேமுதிக பிரேமலதா ஆகியோரை எப்படியாவது அழைக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் காய் நகர்த்தி வந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இதற்காக பல போன் கால்கள் பறந்தது. முக்கியமாக தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் சார்பில் அடுத்தடுத்து போன் கால்கள் பறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பேருமே கூட்டணிக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறபடிக்கிறது.

மெகா கூட்டணியின் பலப்பரிட்சை
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முறையாகத் தொடங்கி வைக்கும் இந்த நிகழ்வில், தற்போதைய என்.டி.ஏ கூட்டணி ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது. இன்றைய மேடையில் இடம் பெற்ற முக்கியக் கட்சிகள்:
அதிமுக (எடப்பாடி பழனிசாமி தலைமையில்)
பாஜக (நயினார் நாகேந்திரன் தலைமையில்)
அமமுக (டி.டி.வி. தினகரன்)
பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு)
தமாகா (ஜி.கே. வாசன்)
ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி
குறிப்பாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக ஏட்டியும் போட்டியுமாக இருந்த இ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இரு துருவங்களையும், பாஜக தலைமை சமாதானப்படுத்தி ஒரே மேடைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஜெயலலிதாவின் விசுவாசிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
கடைசி நிமிடக் காய்நகர்த்தல்கள்: ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக வருவார்களா?
கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, திரைமறைவில் மிகத்தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஓ. பன்னீர்செல்வம் (OPS) மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஆகியோரையும் எப்படியாவது இன்று மேடையேற்றி விட வேண்டும் என்பதில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு தீவிரமாக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறவில்லை.
ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான முட்டல் மோதல்களைச் சரி செய்து, ஒரு "ஒற்றுமைப் புகைப்படம்" (Show of Unity) எடுப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு டெல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இவர்கள் எல்லோரும் வந்தால் அதற்காக இன்னொரு கட் அவுட் வைக்கவும் தயாராக ரெடி செய்து வைத்துள்ளானராம். ஆனால் கடைசி வரை அது பயன்படுத்தவில்லை.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது மதுராந்தகம். சூரியன் மறைந்து குளிச்சி நிலவுவதே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சான்று. பிரதமர் மோடி இந்த மண்ணிலே கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகமே குலுங்கும் அளவு மக்கள் வெள்ளம்.
மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது மதுராந்தகம். சூரியன் மறைந்து குளிச்சி நிலவுவதே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சான்று.
மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டப்படலாமா. மக்கள் விரோத ஆட்சி தேவையா என எடப்பாடி பழனிசாமி கேட்டதும் இல்லை இல்லை என கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆள வேண்டுமா. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் திமுகவுக்கு இறுதித் தேர்தல். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்
தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தந்தவர் மோடி தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். 2026 இல் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்குப் பின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர், என்றுஎன்று மதுராந்தகம் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications