தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை.. ஆனாலும் நடந்த மேஜிக்.. ஆடிப்போன அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை என்கிற போதிலும் வாக்கு சதவீதத்தில் இரட்டை இலக்கத்தை தாண்டி உள்ளது. அதிமுக வாக்கில் பாதி அளவிற்கு பாஜக எடுத்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகளின் படி தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை வாக்கு சதவீதம் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை. அதேநேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தர்மபுரி தொகுதியில் கடைசி வரை முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரமும் கடைசி வரை மாறி மாறி வந்தது. இறுதியாக சௌமியா அன்புமணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திமுக வேட்பாளர் மணி 432667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சௌமியா அன்புணி 411367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் அதிமுக வேட்பாளர் அசோகன் 293629 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான வாக்குகளின் படி, பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.. அதேநேரம் வாக்கு சதவீதம் என்பது இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. பாஜக 47 லட்சத்து 22 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளுடன் 11.10 சதவீதம் வாக்குகளை பெற்று 3 வது பெரிய கட்சி என்கிற நிலையை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 10.79 சதவீதம் வாக்குகள் பெற்று போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் சுமார் 45 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் பெற்று 4வது பெரிய கட்சி என்ற நிலையை பிடித்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வரவில்லை.. அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சுமார் 87 லட்சம் வாக்குகளுடன் 20.48 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேநேரம் திமுகவை பொறுத்தவரை சுமார் ஒரு கோடியே 13 லட்சம் வாக்குகளுடன் 26.62 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக போட்டியிட்ட 22 ல் 22 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்துள்ளது. தேமுதிக 2.63 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஒரு இடத்தில் (விருதுநகரில்) முன்னிலையில் இருந்தது. ஆனால் கடும் போட்டி காரணமாக அங்கு தற்போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்கியது என்பது தெரியவில்லை. ஒட்டமொத்தமாக கட்சிகள் அல்லாதவர்கள் தமிழகத்தில் 21.04 சதவீதம் வாக்குகள் வாங்கி உள்ளனர். இதில் தான் நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதமும், பாமகவின் வாக்கு சதவீதமும், மதிமுகவின் வாக்கு சதவீதம் இருக்கிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications