Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கோட்டையில் ஓட்டை போடும் விஜய்.. ராகுல் காந்தியா இப்படி... ஸ்டாலினே எதிர்பார்க்காத பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு புதிய அரசியல் திருப்பம் அரங்கேறத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் ராகுல் காந்தியின் 'காங்கிரஸ்' கட்சி இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் அண்மைகால செயல்பாடுகள் இருந்தன. ஜனநாயகனுக்காக ராகுல் காந்தி குரல் எடுத்ததால், இது நிஜமோ என்ற கேள்விகள் வலுத்துள்ளன. இதனால் தமிழக அரசியலில் ஏற்பட போகும் மிகப்பெரிய குழப்பம் பற்றி பார்ப்போம்.

திமுகவில் எல்லாருமே விஜய் பாஜக உடன் சேருவார், அதிமுக உடன் கூட்டணி வைப்பார்.. பாஜகவின் டீம் என்று விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜய் சத்தமே இல்லாமல் திமுக கூட்டணி என்ற ஆழமரத்திற்கே குறிவைத்து கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டுவதாக தெரிகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி என்ற ஆணிவேரையே விஜய் வெட்டுவதற்கு தயராகுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படி நடந்தால், திமுக கூட்டணியில் விழுந்த பெரிய விரிசல் ஆக பார்க்கப்படும்.

The major political upheaval that will occur in Tamil Nadu if the TVK forms an alliance with Congress

ஏனெனில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது கடந்த 2004ம் ஆண்டில் தொடர்ந்து 2025 வரை தொடர்ந்து வந்துள்ளது. இடையில் 2014ம் ஆண்டு மட்டும் கூட்டணி அமையவில்லை. மற்றபடி தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வந்தது. குறிப்பாக சொல்வது என்றால், கடந்த 8 தேர்தல்களாக திமுக-வுடன் கைகோர்த்து வந்தது காங்கிரஸ், தற்போது 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. இதற்கு திமுக தலைமை பிடிகொடுக்க மறுத்து வருகிறது.

திமுக நிர்வாகிகளை பொறுத்தவரை தங்களுடைய பலத்தில் தான் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை ஜெயிக்கிறது என்றும், அவர்களுக்கு சுத்தமாக தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை என்று பலமாக நம்புகிறார்கள். இதனால் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிகையை கடுமையான எதிர்க்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், வேலுச்சாமி, பிரவீன் காந்தி என தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுக உடன் இருந்தால் திமுகவின் கிளை கழகம் போலவே காங்கிரஸ் கட்சியை பார்ப்பார்கள் என்றும், இது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் பங்கு தர மறுப்பதால் 'பிளான்-பி' ஆக தவெகவை காங்கிரஸ் பார்த்து வருகிறது. ராகுல் காந்தி - விஜய் இடையேயான நட்பு மற்றும் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் இந்தக் கூட்டணிக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணி அமைந்தால் ஏற்படப்போகும் 3 முக்கிய மாற்றங்கள் ஏற்படும். விஜய்க்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் ரசிகர் பட்டாளம், காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியுடன் இணையும்போது, அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் திமுக-வை நோக்கி இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகள், தவெக - காங்கிரஸ் என்ற மதச்சார்பற்ற புதிய கூட்டணிக்குத் திரும்பும் அபாயம் இருக்கிறது. 2026-ல் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸின் கரத்தை வலுப்படுத்த விஜய்யின் 'ஸ்டார் பவர்' உதவும் என டெல்லி மேலிடம் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது-

இது தொடர்பாக அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, "இந்தக் கூட்டணி அமைந்தால், அது 1996-ல் மூப்பனார் - ரஜினி ஏற்படுத்திய தாக்கத்தை விட பெரியதாக இருக்கும். ஆனால், விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்குமா? அல்லது ஆட்சியில் சம பங்கு கிடைக்குமா? என்பதுதான் இதில் உள்ள ஆகப்பெரிய சிக்கல் ஆக இருக்கும். தற்போது வரை இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், "ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் மதச்சார்பற்ற சக்திகள்" என்ற தவெக-வின் சமீபத்திய கருத்துக்கள், காங்கிரஸை நோக்கியே கைகாட்டுகின்றன.

ஜனநாயகனுக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்திருப்பதன் மூலம் திமுகவிடம் ஒன்று பேரம் பேச தவெகவை பயன்படுத்தலாம் என்றும் அல்லது விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் என்றும் தகவல்கள் பரவுகிறது. இது இரண்டுமே திமுகவிற்கு நல்லது, இல்லை. வலுவான கூட்டணி எப்போது உடையும் என்று காத்துக்கொண்டிருக்கிறது அதிமுக மற்றும் பாஜக. அப்படி உடைந்தால், அது திமுகவிற்கு பெரிய பாதிப்பாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+