ஐபிஎஸ் பணி கிடைத்தும் உதறினார்.. மனதை உலுக்கிய பஞ்சம்.. தலைவிதியை மாற்றி எழுதிய எம்.எஸ்.சுவாமிநாதன்!
சென்னை: இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பால் இன்று காலமானார். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஒழிக்கும் கனவோடு வேளாண் துறையில் அடியெடுத்து வைத்த அவர், தனது சீரிய முயற்சிகளால் அதைச் சாதித்துக் காட்டினார். அவரைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றி: எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார் சுவாமிநாதன். சுவாமிநாதனின் தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது.

ஆனால், 1942ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சம் எம்.எஸ்.சுவாமிநாதனை மிகவும் கடுமையாக பாதித்தது. கடுமையான அரிசி பற்றாக்குறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தது சுவாமிநாதன் மனதை உலுக்கியது. நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் விவசாயத்தில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
ஐபிஎஸ் பணிக்கு தேர்வானவர்: பின்னர், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், ஐபிஎஸ் பணியில் சேரவில்லை. வேளாண்மை, உணவு உற்பத்தி சார்ந்த பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உணவு உற்பத்தி தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
முனைவர் பட்டத்திற்குப் பிறகு அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்ளச் சென்ற அவர் அங்கு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவ பெரிதும் உதவினார். அங்கேயே அவருக்கு வேலை கிடைத்தும், அதில் சேராமல் 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.
தலைவிரித்தாடிய பஞ்சம்: 1960களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. உணவுப் பஞ்சத்தைப் போக்க அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்திய அரசால் பசுமைப்புரட்சி கையில் எடுக்கப்பட்டது. ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், டபுள் மடங்கு லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.
அடுத்த சில ஆண்டுகளில் அதாவது 1970களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி தேவையை விட அதிகரித்தது. இந்திய மக்கள் உணவுக்காக பிற நாடுகளை சார்ந்திருந்த நிலை மாறியது. பசுமைப்புரட்சியால் இந்தியாவை விட்டு பஞ்சம் ஓடியது. இதன் காரணமாகவே இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்படுகிறார்.
பெரும் பொறுப்புகள்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் எம்.எஸ்.சுவாமிநாதன். 1979ல் மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும், 1980ல் மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 1981ல் தேசிய நேஷனல் டெக்னாலஜி வாரிய தலைவராகவும் பதவி வகித்தார். மேலும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் எம்.எஸ்.சுவாமிநாதன்.
60களில் பஞ்சம் தலைவிரித்தாடிய இந்தியாவில், அதன்பிறகு ஏற்பட்ட செழிப்பான உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு, இன்றளவும் உலக நாடுகள் வியக்கும் விஷயமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆசியர்களின் மதிப்பிற்குரிய "டைம் 20" பட்டியலில் எம்.எஸ்.சுவாமிநாதன் இடம்பெற்றதே, உலக அளவில் அவரது சாதனைகள் செலுத்திய இணையற்ற செல்வாக்கை பறைசாற்றும்.
உயரிய கௌரவங்கள்: எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் 70 கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்துள்ளன. இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் எம்.எஸ்.சுவாமிநாதன். சென்னையில் 1988ஆம் ஆண்டு அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மீனா சுவாமிநாதன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார். எம்.எஸ். சுவாமிநாதன் - மீனா சுவாமிநாதன் தம்பதியினருக்கு சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யாராவ் ஆகிய 3 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications