Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛திறமையால் உயர்ந்த சகோதரர்’.. நடிகர் அஜித்தை புகழ்ந்த அண்ணாமலை.. பிறந்தநாள் வாழ்த்தை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அண்ணாமலை கூறியுள்ள வார்த்தைகள் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். 1990 முதல் சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்தாலும் கூட அவர் ஹீரோவாக நடத்த முதல் படம் அமராவதி தான். அதன்பிறகு படிப்படியாக தனது நடிப்பு மூலம் ரசிகர், ரசிகர்களை கவர்ந்த அஜித் தற்போது தமிழ் சினிமாவின் ‛டாப்' நடிகராக இருக்கிறார்.

The man who in superior due to his talent BJP Chief Annamalai praises Ajith Kumar and sents birthday wishes

நடிகர் அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாளாகும். 1971ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்த நிலையில் அவர் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் எக்ஸ் பக்கத்தில் #Happy Birthday AK, #GoodBadUgly, #VidaaMuyarchi என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட்டிங்கில் உள்ளன. மேலும் நடிகர் அஜித்தின் தீனா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

மேலும் பல திரை பிரபலங்கள் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு,எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களை கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்நீதிருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பாஜகவினர் ஏற்கனவே நடிகர் அஜித் பற்றி அண்ணாமலை பேசிய வீடியோவை கமெண்ட்டில் பகிர்ந்து வருகின்றன. அந்த வீடியோவில் அண்ணாமலை, ‛‛அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. ஒரு தனிமனிதனாக சினிமா துறையில் எந்த பின்புலம் இன்றி ஒரு மனிதன் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்துள்ளார். சதாரண மனிதருக்கு அவர் ஒரு ரோல் மாடல்'' என தெரிவித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+