லுங்கியில் பியர் கிரில்ஸ்! மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிக்க இருக்கும் பிரபலம் குறித்து சர்ப்ரைஸ்
சென்னை: மேன் vs வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், லுங்கி கட்டியவாறு இருந்த போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் மூலம் இவருடன் காட்டுக்குள் பயணிக்க இருக்கும் அடுத்த பிரபலம் யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மனித நடமாட்டம் இல்லாத காடுகளில் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்பதை அறிவியல் ரீதியாக விளக்குவதுதான் மேன் vs வைல்ட் எனும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகின் மிகவும் மோசமான காடுகள், பாலைவனங்கள் போன்றவற்றில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்பதை கிரில்ஸ் துல்லியமாக விளக்கி வந்தார். முறையான உணவு கிடைக்காத பட்சத்தில் எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் எங்கு கிடைக்கும்? கிடைத்த தண்ணீரை எப்படி சேமிப்பது என கிரில்ஸ் தனது நிகழ்ச்சி மூலம் விளக்கியிருப்பார்.

இவரது மேன் vs வைல்ட் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். பலர் இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து காட்டிலிருந்து தப்பியிருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரபலங்களும் பங்கேற்றிருக்கின்றனர். இந்தியாவை பொறுத்த அளவில் பிரதமர் மோடி, சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது அவர் டிவிட்டரில் போட்டுள்ள போஸ்ட் ஒன்று அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. டிவிட்டரில் அவர் லுங்கி கட்டியவாறு போஸ்ட் போட்டிருக்கிறார். எனவே நிச்சயம் இந்தியாவை சேர்ந்த பிரபலம்தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அடுத்த ஷோவில் அவருடன் இணைய பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கிய பின்னர்தான் அதில் யார் பங்கேற்கிறார் என்பது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications