சந்திரயான் 3 சக்சஸ்.. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட.. சர்வதேச மீடியாக்கள் என்ன சொல்லியுள்ளன தெரியுமா?
சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று நிலவில் இந்தியா தடம் பதித்து வரலாற்று சாதனை படைத்ததை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் பிரமிப்புடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதில் இருந்தே இந்திய ஊடகங்கள் தொடர்ந்து அது குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. முதல் 2 முறைகள் வெற்றிபெறாத நிலையில் மூன்றாவது முயற்சி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகள் இதை உற்று நோக்கி வந்தனர்.

இன்று மாலை நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமையை சந்திரயான் 3 விண்கலம் மூலம் பெற்ற இந்தியாவின் புகழை போற்றி இந்தியாவின் ஆங்கில மற்றும் பிற மொழி ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பல சேனல்கள் நேரடி ஒலிபரப்புகளையும் செய்து வருகின்றன.
இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி உலகளவில் முன்னணியில் இருக்கும் பல ஊடகங்கள் இதுபற்றி பிரமிப்புடன் செய்தியை வெளியிட்டு இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும் அளவுக்கு சர்வதேச மீடியாக்களின் தலைப்புகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
பிரபல பிரிட்டன் ஊடகமான பிபிசி வெளியிட்டு உள்ள செய்தியில், "சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கியதன் மூலம் இந்தியா வரலாறு படைத்து உள்ளது" என அந்த ஊடகம் தலைப்பிட்டு இருக்கிறது. மற்றொரு பிரிட்டன் ஊடகமான தி கார்டியன், "வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் பகுதியில் இந்தியா விண்கலத்தை நிறுத்தியுள்ளது." என்று தெரிவித்து உள்ளது உள்ளது.

அமெரிக்க ஊடகமான தி நியூயார்க் டைம்ஸ், "நிலா பந்தயத்தில், இந்தியா முதல்முறையாக தெற்கு மண்டலத்தை தொட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளது. மற்றொரு அமெரிக்க ஊடகமாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு இருக்கும் செய்தியில், "நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிறுத்திய உலகின் முதல் நாடாக இந்தியா அமைந்து உள்ளது." என தலைப்பிட்டு இருக்கிறது.
சிஎன்என் வெளியிட்ட வெளியிட்ட செய்தியில், "இந்தியா நிலவை தொட்டு வரலாறு படைத்து உள்ளது" என தலைப்பு வைத்து இருக்கிறது. ஜெர்மனியில் DW வெளியிட்டு இருக்கும் செய்தியில், "நிலவின் தென் துருவத்தில் முதல் முறையாக இந்தியாவின் விண்கலம் தரையிறங்கி உள்ளது." என தலைப்பிட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications