நெருங்கும் லோக்சபா தேர்தல்.. பட்ஜெட் முடிந்த கையோடு இன்று மாலை அதிமுக மா.செ. கூட்டம்
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. மறுபுறம் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகத்தில் மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் பிஸியாக உள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் பணி
இந்த கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், சட்டமன்ற இடைத் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுகவின் இரும்பு தலைவியாக இருந்த ஜெயலலிதா மறைந்து விட்ட பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் என்பதால், வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுவது. அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
மறுபுறம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எம்எல் ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுவது மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் , விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற உள்ளது உறுதியாகி உள்ளது.

அதிரும் அரசியல் களம்
எனவே, இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற விவகாரத்துடன், கூட்டணி விவகாரம் மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் இரு கட்சிகளும் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications