சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை: சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை சொல்லி இருக்கிறது. பேருந்து, ரயில்களில் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பாஸ் முறை மெட்ரோ ரயில்களிலும் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயில் செல்கிறது.

இதேபோல் வண்ணாரப்பேட்டை சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் ஓடுகிறது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோவில் வடபழனி சாலை, கோயம்பேடு டூ சென்ட்ரல் சாலை, சென்ட்ரல் டூ விக்கோ நகர் மற்றும் சென்ட்ரல் டூ சைதாப்பேட்டை சாலை, ஆலந்தூர் டூ பரங்கி மலை சாலை ரயில் வழித்தடங்கள் இல்லாத பகுதிகள் உள்ளன.
இதனிடையே சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கம் மொத்தம் 118.9 கிமீ நீளம் கொண்ட மூன்று வழித்தடங்களில் 128 நிலையங்களுடன் திட்டமிடப்பட்டிருக்கிறது. மாதவரத்திலிருந்து சிப்காட் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 45.8 கிமீ நீளமுள்ள காரிடார் 3, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையம் வரையிலான 26.1 கிமீ நீளமுள்ள காரிடார் 4, சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாதவரம் முதல் 47 கிமீ நீளமுள்ள காரிடார் 5 ஆகிய மூன்று வழித்தடங்கள் வர உள்ளன.
இவற்றில் மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கும் போது, சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்பட்டு விடும். அதன்பிறகு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயரும்.
தற்போதைய நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் பயணித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஏப்.28 அன்று 2,68,680 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதாந்திர பாஸ் திட்டம் உள்ளது. மாதம் 2500 ரூபாய் கட்டினால், அட்டை தரப்படும். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரு மாதம் எங்குவேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும். இதேபோல் குறிப்பிட்ட ஸ்டேசன் டூ ஸ்டேசன் மாதம் மாதம் செல்லவும் சலுகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை சொல்லி இருக்கிறது. பேருந்து, ரயில்களில் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பாஸ் முறை மெட்ரோ ரயில்களிலும் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. முதல்கட்டமாக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications