இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே.. ஆடிப்போன திமுகவின் பத்ம பிரியா.. அவர் பெயரில் அவருக்கே வந்த ஆப்பு
சென்னை: திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா பெயரில் போலியான கணக்கு தொடங்கிய மர்ம நபர், அதில் தன்னுடைய ஐடியை சங்கிகள் முடக்கிவிட்டதாவும், எனவே தனது ஒரிஜனல் ஐடியை ரிப்போர்ட் அடிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா ட்விட்டரில் போலி ஐடி குறித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை தமிழச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கி வந்தவர் பத்ம பிரியா. இவர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெரிய அளவில் தோல்வியை தழுவியதால், பலரும் அக்கட்சியில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் சேர்ந்தனர்.

அப்படித்தான் பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். எதிர்க்கட்சியினருக்கு சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுதேடி போய் உதவி செய்தும் வருகிறார். கடந்த டிசம்பர் 6ம் தேதி முதல் பல்வேறு இடங்களில படகில் சென்றும், நேரில் சென்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார் பத்ம பிரியா. இவர் உணவு உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பத்ம பிரியா பெயரில் போலியான கணக்கு தொடங்கி உள்ளார் மர்ம நபர் ஒருவர். அப்படியே கொஞ்சம் கூட மாற்றவில்லை.. போன் நம்பர், முகப்பு படம், பதிவுகள், முகப்பு படம் என எல்லாமே அச்சு அசலா ஒரிஜினல் போலவே இருந்தது. இந்த புகைப்படத்திற்கு பின்னூட்டமாக தன்னுடைய ஐடியை சங்கிகள் முடக்கிவிட்டதாவும், எனவே தனது ஒரிஜனல் ஐடியை ரிப்போர்ட் அடிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா ட்விட்டரில் போலி ஐடி குறித்து அறிய வேண்டும் என்பதற்காக பதிவிட்டுள்ளார்.
BEWARE of this FAKE ID ‼️ 🤦🏻♀️ pic.twitter.com/tozENl2QHQ
— Padma Priya (@Tamizhachi_Offl) December 12, 2023
இப்போது எல்லாம் ஒரிஜினல் ஐடிக்களை காலி செய்து, ஃபேக் ஐடிக்கள் மூலம் தவறான தகவலை பரப்பி மக்களை குழப்பவும் செய்கிறார்கள். பிரபலமான பலருக்கு இது அடிக்கடி நடக்கிறது. பிரபலமானவர்கள் போலவே போலியான ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் எதிர்சிந்தாந்திற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இப்போது ஒரிஜினல் ஐடி திமுக ஆதரவாளர் என்றால், ஃபேக் ஐடியில் உள்ளவர் திமுகவிற்கு எதிரானவராக இருப்பார்.
இதேபோல் ஒரிஜினல் ஐடி பாஜக ஆதரவாளர் என்றால் , ஃபேக் ஐடி, பாஜகவிற்கு எதிரானவராக இருப்பார். இதேபோல் அதிமுக, நாதக என எல்லா கட்சிகளுமே, ஏன் ஊடகவியலாளர்கள் பெயரில் கூட ஃபேக் ஐடி உருவாக்கி குழப்பம் விளைவித்து வருகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால் போலி ஐடிக்கு மாதம் மாதம் காசு கட்டி புளு டிக்கெல்லாம் பக்காவா வாங்கி இதுபோல் செய்கிறார்கள். ஓவராக ரிப்போர்ட் அடித்து ஒரிஜனல் ஐடியை காலி செய்யவும் அவர்கள் தயங்குவது இல்லை.. இப்போது சண்டை ட்விட்டர் களத்தில் நடக்கிறது. ட்விட்டரிலே கடந்த இரண்டு வாரமாக ரணகளமாக இருக்கிறது. கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications