தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது.. டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா பெயர் மேலானது - வைரமுத்து
சென்னை: டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத் தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது என்றும் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, தற்போது 101 வயதில் வாழும் வரலாறாகத் திகழும் சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்திருக்கிறது. ஆனாலும், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவருகிறார். இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர்.

சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் மறுத்திருக்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி.
இந்த நிலையில் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காதது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும் பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
"டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது
இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்
பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது
கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய் சிவக்கப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications