சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் பயிற்சி.. தேர்தல் தோல்வி.. சர்ச்சை மேல் சர்ச்சை.. யார் இந்த எல்.முருகன்? பின்னணி என்ன?

பாஜக தமிழக தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் எல். முருகன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தமிழக தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் எல். முருகன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    தமிழக பாஜகவின் புதிய தலைவர் எல்.முருகன் நியமனம்

    பெரும் ஆலோசனைக்கு பிறகு வழக்கறிஞர் எல். முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கட்டுள்ளார். 7 மாதமாக காலியாக இருந்த பதவிக்கு நேற்றுதான் அறிவிப்பு வெளியானது. 2021 சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மூத்த உறுப்பினர்கள் பலர் தலைவர் ஆக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அருந்ததியர் பிரிவை சேர்ந்த எல். முருகன் பாஜக தலைவரானது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.

    தீவிர ஆர்எஸ்எஸ்

    தீவிர ஆர்எஸ்எஸ்

    எல். முருகன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சிறு வயதில் இருந்து தீவிரமாக பணியாற்றி இருக்கிறார். கல்லூரி நாட்களில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பில் மிக தீவிரமாக கலந்து கொண்டு பல்வேறு கூட்டங்களில் பேசி இருக்கிறார். 1996ல்தான் இவரின் தீவிர வலதுசாரி அரசியல் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பான ஏபிவிபி அமைப்பில் சேர்ந்தார்.

    செம தீவிரம்

    செம தீவிரம்

    அருந்ததியினர் பிரிவை சேர்ந்த இவர், சென்னை அம்பேத்கார் சட்ட கல்லூரியில் எல்எல்பி படித்து இருக்கிறார். ஏபிவிபி சார்பாக அங்கு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்து கொண்டு இருக்கிறார். எல்எல்பி படித்த பின் இவர் மனித உரிமைகள் தொடர்பாக பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

    அனுபவம்

    அனுபவம்

    சுமார் 15 வருடங்களாக இவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருக்கிறார். பாஜக சார்பாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதம் செய்துள்ளார். திமுகவிற்கு எதிரான அவதூறு வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவை தொடக்கத்தில் இருந்து இவர் கடுமையாக எதிர்த்தவர். திமுகவிற்கு எதிராக பஞ்சமி நில பிரச்சனையை தொடங்கி வைத்ததே எல், முருகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் தோல்வி

    தேர்தல் தோல்வி

    இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், சென்னையில்தான் வசித்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் இவர் மோசமாக தோல்வியை தழுவினார். இவர் அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்த இவர் பாஜகவின் எஸ்சி பிரிவு தேசிய செயலாளராக உள்ளார். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இவர் இருக்கிறார்.

    சர்ச்சை கருத்து

    சர்ச்சை கருத்து

    தமிழகத்தில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டது என்று பேட்டி கொடுத்த சில நாட்களுக்கு முன் இவர் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல் அவ்வப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சிஏஏ போராட்டத்திற்கு எதிராகவும் இணையத்தில் நிறைய கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இவர் தமிழக பாஜக அரசியலை தலைவர்களுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது.

    என்ன செய்தார்

    என்ன செய்தார்

    இவர் பெரும்பாலும் தேசிய பாஜக தலைவர்களுடன்தான் நெருக்கம் காட்டி வந்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர், தலித் மக்களுக்கு பெரிதாக சாதனைகள் எதுவும் செய்ததாக வரலாறோ, தரவுகளோ இல்லை. அதேபோல் தலித் மக்களுக்காக இவர் வாதிட்ட வழக்குகள் தொடர்பாகவும் பெரிய லிஸ்ட் எதுவும் இல்லை.

    English summary
    The new Tamilnadu BJP President: Alpha and Omega about L.Murugan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X