தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பித்த புதிய வசதி.. பொதுமக்களுக்கு என்ன நன்மை?
சென்னை: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு வழக்குகள் நிலவரத்தை உடனுக்குடன் அறிய, www.tnreat.tn.gov.in/ என்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய உத்தரவுகள் மற்றும் ரியல் எஸ்டேட் வழக்குகள் விவரங்களை எளிதாக அறிய முடியும்.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் அமலுக்கு வந்தது. இதற்காக, 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை துவங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களின் பதிவினை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ( RERA ) கட்டாயமாக்கி உள்ளது. ரியல் எஸ்டேட் செய்வோர் RERAவில் திட்டத்தை பதிவு செய்யாமல் விற்பனை செய்ய முடியாது.
TNRERA-ல் 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள நிலங்களை பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அமேலம் எட்டு அடுக்குமாடிகளுக்கும் அதிகமாக குடியிருப்புகள் மற்றும் மனைகளை விற்பனை செய்வோர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் மனைகள் 500 சதுர மீட்டருக்கும் குறைவாக இருந்தால், RERA ஒப்புதலை அவர்களின் விருப்பத்தின் பெயரில் செய்து கொள்ளலாம், அது கட்டாயமில்லை. அதநேரம் ஒருவரின் தனிப்பட்ட மனைகளை விற்கவோ அல்லது மாற்றவோ RERA ஒப்புதல் அவசியம் கியைடாது.. இதே போன்று மனைகள் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், தனித்தனி மனைகளாக விற்கப்பட்டாலும் RERA ஒப்புதல் பெற அவசியம் கிடையாது.
RERAவில் பதிவு செய்தவர்கள் விவரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது ப்ளாட்டுகளின் வகைகள், எடுக்கப்பட்ட ஒப்புதல்களின் பட்டியல் போன்றவற்றை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட திட்டத்தின் விவரங்களை RERA இன் இணையதளத்தில் ஒரு விளம்பரதாரர் பதிவேற்றுவது கட்டாயமாகும். இதேபோல், சொத்து விற்பனை செய்வோர், தரகர்கள், இடைத்தரகர்களும் TNRERA வில் பதிவு செய்ய வேண்டும்.
இதில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிடம் தான் மக்கள்சொத்துக்களை வாங்க வேண்டும். அதுவே அவர்களுக்கு நல்லது. மேலும் வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை, கட்டடம் மற்றும் மனைகளின் உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு RERA சான்றிதழ் உத்தரவாதம் அளிக்கும். முறைகேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறையும். மேலும் இடம் அல்லது வீடு வாங்குபவர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உறுதி செய்கிறது. ஒருவேளை பிரச்சனை என்றால், வாங்குபவர்களும், கட்டடம் மற்றும் மனைகளின் உரிமையாளர்களும், RERA-ன் புகார்கள் குழுவை (RERA's complaints panel) எளிதில் அணுக முடியும்.
அதேநேரம் TNRERA இல் பதிவு செய்யத் தவறினால் ஒரு குற்றமாகும் மற்றும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதனிடையே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தீர்ப்பாயத்தில் முறையிடுவோர் வசதிக்காக, ஆன்லைன் வசதி துவங்கப்பட்டிருக்கிறது. இதுவரை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான இணையதளத்தின் ஒரு பகுதியாக, மேல்முறையீட்டு தீர்ப்பாய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் தீர்ப்பாயத்துக்கு என தனியாக, www.tnreat.tn.gov.in/ என்ற பெயரில் புதிய இணையதளம் துவங்கப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியல், உத்தரவுகள் குறித்த விபரங்களை, பொதுமக்கள் இத்தளத்தின் வாயிலாக எளிதாக அறிய முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications