டிவி சேனல் தொடங்க திட்டம் போடும் விஜய்?.. இந்தப் பெயரும் அடிபடுதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அரசியல் வருகைக்குப் பின்னர் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவர்களது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். கட்சியின் கொள்கைகள், அரசியல் எதிரிகள் என பல விஷயங்களை பேசினார்.

tvk vijay

பாசிம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.

டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து, விஜய்யும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருந்தார். விஜய்யின் அரசியல் உள்ளிட்டவற்றால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். 2026 தேர்தலில் கூட்டணி எல்லாம் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விஜயின் தவெக கட்சி சார்பில் புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி சார்ந்த செய்திகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளாராம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல, தவெக தலைவர் விஜயும் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி சேனல் தொடங்குவது குறித்து தனது கட்சியினரிடையே ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அந்த தொலைக்காட்சி சேனலுக்கு தமிழ் ஒளி என்று பெயரிடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஒளி என்ற பெயரிலேயே தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுமா அல்லது வேறு பெயரில் தொடங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+