ட்ரெண்ட் ஆன விஜய்! களத்தில் குதித்த திமுக, அதிமுக ஐடி விங்க்! ரணகளமான எக்ஸ் தளம்!
சென்னை: விஜய் புதிய கட்சி ஆரம்பித்த செய்தி பின்னுக்குத் தள்ளுவதற்காக திமுக அதிமுக இடையே எக்ஸ் தளத்தில் கடும் யுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டுக் கட்சிகளும் கண்டா வரச் சொல்லுங்க என்று ஹேஷ்டேக் போட்டு, ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கடந்த 2013 பிப்ரவரி மாதம் ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது அதற்குப் பெயர் ட்விட்டர். இப்போது அந்தத் தளத்திற்குப் பெயர் எக்ஸ்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ட்விட்டர் தளம் வேறு முதலாளியின் கைக்கே மாறிவிட்டது. அந்த முதலாளி எலான் மாஸ்க் வாங்கிய பிறகு மூன்று முறை அதன் லோகோவையே மாற்றிவிட்டார்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால், அந்த எக்ஸ் தளத்தில் விஜய்யை 4.9 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் இதுவரை அவர் யாரையும் பின் தொடர்ந்ததே இல்லை.

இப்போது அவர் ஒருவரைப் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இந்தக் கணக்கு ஜனவரி 2024இல் தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் 'தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு' என்று அதில் விஜய் கூறி இருக்கிறார்.
இந்தக் கணக்கை தற்போது வரை 83 ஆயிரம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். மநீமவில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் டிவிகே விஜய் கணக்கை பின் தொடர்பவர்களில் இருவராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மேலும் பிரேம்ஜி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தனஞ்செயன் போன்ற திரைப் பிரபலங்கள் பலரும் பின் தொடர தொடங்கி உள்ளனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ், உங்களது அரசியல் நுழைவுக்கு வாழ்த்துகள் நண்பா. உங்களின் புதிய பயணம் வெற்றியடைய நான் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இன்று எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் தமிழக வெற்றி கழகம் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஏற்குறைய மதிய நிலவரப்படி போஸ்ட்டுகள் போடப்பட்டுள்ளன. அடுத்து தமிழக முன்னேற்றக் கழகம். டிவிகேவிஜய் போன்ற ஹாஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.

இதனிடையே திமுக மற்றும் அதிமுக இடையே #கண்டா_வரச்_சொல்லுங்க ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. எம்,பி.யை தொகுதி பக்கமே காணோம் என்று அதிமுக இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகிறது. அதைப்போல் சிஏஏ அமலாக்கச் சட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமியை டார்கெட் செய்து திமுக பதிலடி கொடுத்து வருகிறது.

மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட 38 MP ய #கண்டா_வரச்_சொல்லுங்க என சவுண்ட் விட்டு வருகிறது அதிமுக ஐடி விங்க். CAA சட்டம் அமலாக காரணமாக இருந்த அடிமையை #கண்டா_வரச்_சொல்லுங்க என்கிறது திமுக ஐடி விங்க்.

இதற்கு இடையில், அம்மா உணவகம் காணாமல் போனது, அம்மா லேப்டாப் தராமல் நிறுத்தியது எனப் பல பிரச்சினைகளை அதிமுக ஐடி விங்க் தகவல்களைத் தட்டி விட்டு வருகிறது.

திண்டுகள் சீனிவாசன், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை என நாக்குத் தவறிச் சொன்ன வீடியோவைப் போட்டு, என்னதான் கூட்டணியில இல்லன்னு எடுபிடி நாடகமாடினாலும், அடிக்கிற வெயிலுல பொருளாளர் சீனிவாசனை கட்டுப்படுத்த முடியுமா?அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? #கண்டா_வரச்_சொல்லுங்க என்று கொந்தளித்து வருகிறது திமுக ஐடி விங்க்.

இன்று விஜய் புதிய கட்சி தொடங்கிய செய்தியை எப்படியாவது பின்னுக்குத் தள்ள வேண்டும் என அதிமுகவும் திமுகவும் திட்டமிட்டு ஒன்றுசேர்ந்து எக்ஸ் தளத்தை ஆக்கிரமித்துள்ளன.
இதற்கு இடையில் ஆளுநர் வருகைக்காகப் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று புகாரையும் எடுத்துப் போட்டு கலவரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பு எக்ஸ் தளத்தில் மட்டும் இல்லை. பல பகுதிகளில் திமுகவைக் குறிவைத்து கண்டா வரச் சொல்லுங்க என்று போஸ்டர் அடித்தே ஒட்டி உள்ளது.

திமுக கலர் கலராக அட்டைகளை எழுதிப் பரப்பி வருகிறது.
பாஜக சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி, தமிழ்நாட்டு மக்களுக்குப் பச்சைத் துரோகம் செய்த அடிமைகளை கண்டா வரச் சொல்லுங்க என்றும் கூட்டணிக்கு ஆள் யாரையாவது கண்டா வரச் சொல்லுங்கள் என்றும் தேர்தலில் நிற்க வேட்பாளரை கண்டா வரச் சொல்லுங்கள் என்றும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து வருகிறார்கள்.
இந்தச் சண்டைக்கு இடையில் விஜய் புதிய கட்சி தொடங்கிய செய்தியும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications