அண்ணே அடுத்து நீங்கதான்.. நம்பர் 2க்கு குறி வைத்த டெல்லி.. போனை போட்டு எச்சரித்த ஸ்டாலின்.. அலறுதே
சென்னை: திமுகவில் அடுத்த ரெய்டுக்கு உள்ளாக போகும் அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஒருவருக்கு எச்சரிக்கை அனுப்பி உள்ளாராம்.
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் சமீபத்தில் ஐடி ரெய்டு நடந்தது. அதில் கிடைத்த ஆவணங்களை வைத்து விரைவில் அமலாக்கத்துறை ரெய்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர் தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு சிறையிலேயே உள்ளார்.
பொன்முடி மீதான ரெய்டு: சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜெகத்ரட்சகன் ரெய்டு; இது போக திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்தது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் திமுகவில் அடுத்த ரெய்டுக்கு உள்ளாக போகும் அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஒருவருக்கு எச்சரிக்கை அனுப்பி உள்ளாராம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் சோர்சுகள்.. ஏ. வ வேலுக்கு அடுத்து நம்பர் 2 அமைச்சர் ஒருவரை அவர்கள் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் ரெய்டு நடத்த வாய்ப்பு உள்ளது. அது திமுகவிற்கு மேலும் பிரஷரை கொடுக்கும். திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது .
முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அந்த அமைச்சருக்கு போனை போட்டு ஸ்டாலின் எச்சரித்து உள்ளார். பெரும்பாலும் டிசம்பரில் இந்த ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்று கூறியுள்ளனர்.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications