சோழிங்கநல்லூரில் அடியோடு சரியும் வாக்காளர்கள் எண்ணிக்கை.. செங்கல்பட்டில் மொத்தமாக மாறும் நிலவரம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள். பலர் இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், படிவத்தை நிரப்பி ஒப்படைக்காதவர்கள் பெயர்கள் நீக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சத்து ஆயிரத்து 901 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை அடியோடு சரிகிறது. அதிகபட்சமாக 2 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து படிவங்கள் திரும்பபெறப்பட்டது. திரும்ப அளிப்பதற்கு காலஅவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது,

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் இந்திய தேர்தல் கமிஷன் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்த வாக்காளர்- 7,02,450, நீக்கம்- 2,18,444. இறுதி வாக்காளர்- 4,84,005
பல்லாவரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 4,44,498
நீக்கம்- 1,49,789, இறுதி வாக்காளர்கள்- 2,94,712. தாம்பரம்
மொத்த வாக்காளர்- 4,15,483, நீக்கம்- 1,21,137, இறுதி வாக்காளர்கள்- 2,94,346
செங்கல்பட்டு மொத்த வாக்காளர்கள்- 4,45,500, நீக்கம்- 1,06,270
இறுதி வாக்காளர்- 3,39,231, திருப்போரூர்
மொத்த வாக்காளர்- 3,19,534, நீக்கம்- 47,558
இறுதி வாக்காளர்- 2,71,976
செய்யூர் மொத்த வாக்காளர்கள்- 2,28,255, நீக்கம்- 32,394
இறுதி வாக்காளர்கள்- 1,95,861. மதுராந்தகம் மொத்த வாக்காளர்- 2,31,642
நீக்கம்- 26,309, இறுதி வாக்காளர்கள்- 2,05,333
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்- 27,87,362, நீக்கம்- 7,01,901, இறுதி வாக்காளர்கள் - 20,85,464.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications