Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க இது? ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு போட்டோவை பார்த்து இருக்கவே மாட்டீங்க.. ஷாக்கான நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடரில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

இதுவரை நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து 4 போட்டிகளில் வென்று வலுவாக உள்ளது.

The one picture on IPL 2023 is trending in social: Here is the real reason behind it

லக்னோ அணி 5 போட்டிகளில் 3ல் வென்று 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த அணியிடம் +0.761 ரன் ரேட் உள்ளது.

குஜராத் அணி 5 போட்டிகளில் 3ல் வென்று 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்த அணியிடம் +0.192 ரன் ரேட் உள்ளது.

கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 2ல் வென்று 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் அடிப்படையில் நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியிடம் +0.320 ரன் ரேட் உள்ளது.

சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் 2ல் வென்று 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் அடிப்படையில் 5ம் இடத்தில் உள்ளது. அந்த அணியிடம் +0.225 ரன் ரேட் உள்ளது.

பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

The one picture on IPL 2023 is trending in social: Here is the real reason behind it

இந்த ஐபிஎல் தொடரில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. முக்கியமாக பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவரில்தான் முடிந்தன. சில போட்டிகள் கடைசி பந்து வரை சென்றது. முக்கியமாக ரிங்கு சிங் அடித்த 5 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் உலகின் புதிய சூப்பர் ஸ்டார் ஆகி உள்ளார் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது.

யாஷ் தயால் வீசிய இந்த ஓவரில் 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்து, மேட்சை வென்றது மட்டுமின்றி.. ஐபிஎல் உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தும் இருக்கிறார் ரிங்கு சிங்.

அதேபோல் லக்னோவிற்கு எதிரான போட்டியில் 212 ரன்கள் அடித்தும் கூட பெங்களூர் அணியால் வெற்றிபெற முடியவில்லை. இதில் கடைசி பந்தில் மேன்கட் செய்ய முயன்று ஹர்ஷல் பட்டேல் சொதப்பியது பெரிய அளவில் வைரலானது.

அதற்கும் ஒரு படி மேலே போய் சிஎஸ்கே ராஜஸ்தான் மேட்சில் தோனி கடைசி பந்து வரை மேட்சை கொண்டு சென்று கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடியாமல் மேட்சை முடித்தார். இந்த ஆட்டமும் கவனம் பெற்றது.

The one picture on IPL 2023 is trending in social: Here is the real reason behind it

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதன்படி பீகாரில் இருக்கும் ரயில் நிலையம் ஒன்றில் போலீசார் கைதி ஒருவருக்கு விலங்கு மாட்டிவிட்டு அவருடன் சேர்ந்து ஐபிஎல் போட்டியை போனில் பார்த்து உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் போல இப்படி மேட்ச் பார்க்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை தாண்டி இந்தியாவில் அதை ஒரு மதம் என்பார்கள். அதை உறுதி செய்யும் விதமாகவே தற்போது போலீசாரும் குற்றவாளியும் சேர்ந்து மேட்ச் பார்க்க தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூர் - சென்னை இடையிலான மேட்ச் நடக்க உள்ள நிலையில்.. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+