தண்ணீரிலும் அரசியல்.. களம் குதித்த திமுக.. ஜெ. ஸ்டைலுக்கு மாறாமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக!
குடிநீர் பஞ்சம் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது
Recommended Video
சென்னை: தண்ணீர் பிரச்சனை இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டு விடும் என்று அதிமுக தலைமை எதிர்ப்பார்த்திருக்காததுதான்.. அதே சமயம்.. திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது மேலும் கலக்கத்தை தந்துள்ளது!
பொதுவாக வெயில் காலங்களில் குடிநீர் பிரச்சனை என்பது வரக்கூடிய ஒன்றுதான். கருணாநிதி ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும்.. இதற்கான முன்னேற்பாடுகளை சரியாக எடுப்பார்கள். மக்கள் இப்படி தெரு தெருவாய் அலையும் நிலைக்கு ஆளாக்க மாட்டார்கள்.
பொதுப்பணித்துறையில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்று கேள்விப்பட்டால், விடிகாலையிலேயே அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கு கருணாநிதி போன் செய்து அலர்ட் செய்வாராம். அதேபோலதான், வறட்சி நிலவிய சமயம், ஜெயலலிதா வீராணம் ஏரியிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவது போன்ற புதிய முயற்சிகளை எடுத்தார்.

ஆஸ்பத்திரிகள்
ஆனால் இப்போதுள்ள அதிமுக அரசு இன்னமும், ஜெ. பாணியிலேயே தேங்கி கிடக்கிறது. புதிய முயற்சி, புரட்சிகர திட்டம் என்று எதுவுமே இல்லை. அதனால்தான் அரசு ஆஸ்பத்திரிகள் தண்ணீர் இல்லாமல் நாறிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாதக செயல்பாடுகள்
இந்த தண்ணீர் விவகாரத்தைதான் திமுக கையில் எடுத்துள்ளது. எப்படி பொள்ளாச்சி விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி திமுக கொடியை கொங்கு மண்டலத்தில் பறக்க விட்டுள்ளதோ, அதன்படி குடிநீர் பிரச்சனையில் தலையிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. செல்லும் இடமெல்லாம் அதிமுக அரசின் சுணக்கத்தைதான் சொல்லி வருகிறார்கள்.

ஸ்டாலின் உருவபடம்
அது மட்டுமில்லை.. திமுக சார்பில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்து வருகிறார்கள். இந்த விஷயத்தை முதலில் செய்தது ரஜினி நற்பணியாளர்கள்தான். லாரிகளின் பின்னால் ரஜினி படத்தை போட்டு, தண்ணீர் விநியோகம் நடந்தது. இதேபோல லாரிகளில் இப்போது ஸ்டாலின் உருவத்துடன் தண்ணீர் சப்ளை நடந்து வருகிறது.

சாக்குபோக்கு
தண்ணீர் பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை, எல்லாம் மாயை, மீடியாக்கள் ஊதி பெரிசாக்குகின்றன என்று தமிழக அரசு சார்பில் ஒரு பக்கம் நையாண்டி சாக்குகள் சொல்லி கொண்டே இருந்தாலும், மறுபக்கம் திமுக பட்டையை கிளப்பிவருகிறது. குடிக்க கூட தண்ணீர் இல்லாமல், ஒரு குடத்துக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் கெட்டு விடிய விடிய காத்திருக்கும் மக்களின் பார்வை திமுக பக்கம் திரும்பி வருவதையும் மறுக்க முடியாது! இதில் அதிமுக உடனடியாக சுதாரிப்பது நல்லது.. மக்களுக்காகவும், ஆட்சிக்காகவும்!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications