பிஸ்கட், பாக்கெட் வாட்டர் கொடுங்க.. மனதார உதவுங்க.. அறந்தாங்கி நிஷா உருக்கமான வேண்டுகோள்
திருச்சி மாவட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: இருளிலும், பசியிலும் அவதிப்பட்டு வரும் திருச்சி மாவட்ட மக்களுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர வேண்டும் என்று விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புரட்டி போட்ட புயலினால் பல்வேறு மாவட்ட மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ, நாமே களத்தில் இறங்கி எம் மக்களுக்கு கை கொடுக்கலாம் என்று தனியார் அமைப்புகள் முதல் தனி நபர் வரை கிளம்பி விட்டார்கள்.

அறந்தாங்கி நிஷா
ஆளுக்கு ஒரு பக்கம் சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அப்படித்தான் அறந்தாங்கி நிஷாவும் கிளம்பிவிட்டார்.
திருச்சி போகிறேன்
இவர் சென்னையிலிருந்து திருச்சிக்கு தனது காரில் சென்று கொண்டிருக்கும்போது வழியிலேயே ஒரு பிரத்யேக வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட மக்களுக்காகவே நிஷா இதனை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், "இன்று இரவு திருச்சிக்கு வந்துவிடுவேன்.

நல்ல உள்ளங்கள்
நாளை காலை அங்கிருந்து கிளம்பி விடுவேன். எனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யாராவது உதவ எண்ணினால், தன்னை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு உதவும் திருச்சி மாவட்ட நுல்லுளங்கள், பிஸ்கட் பாக்கெட், தண்ணீர், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்றவற்றை தன்னிடம் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

காசு, பணம் வேண்டாம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை துணிமணியோ, பணமோ இல்லை என்றும், சாப்பிடுவதற்கு உணவும், இருளில் அவஸ்தை பட்டு வரும் மக்களுக்கு மெழுகுவர்த்தியும், குழந்தைகளுடன் இரவெல்லாம் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுவர்த்தியும்தான் அத்தியாவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications