ஆகஸ்ட் முதல்நாளே குட்நியூஸ்.. விலை குறைந்த வணிக சிலிண்டர்.. அப்போ வீட்டு உபயோக சிலிண்டர்?
சென்னை: ஆகஸ்ட் முதல் நாள் நிலவரப்படி, வணிகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ.34.50 சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் தற்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன. இது நுகர்வோருக்கு சாதகமானது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. அதன் தற்போதைய விலை ரூ.868.50 ஆகத் தொடர்கிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. வணிக சிலிண்டர் குறைப்பு இந்த முறை நடந்தது.

புதிய வணிக சிலிண்டர் விலை குறைப்பு மக்களுக்குப் பயன் தரும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை சீராக உள்ளது. இது வழக்கமான மாத விலை நிர்ணயத்தின் பகுதியாகும்.
சிலிண்டர் டெலிவரியில் மாற்றம்
கடந்த சில மாதங்களாக LPG சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் சோதனை செய்யப்படுகிறது. மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள்
மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சென்னை சிலிண்டர் கட்டுப்பாடு இல்லை
இந்த நிலையில்தான் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறு என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக சர்வர் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் ஆதார் அங்கீகார செயல்முறை அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும். இந்த அங்கீகார செயல்முறையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், அது எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று மக்கள் அடிக்கடி பீதியடைந்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. இதனால் கட்டணம் உயராது. அதே சமயம் அபராதம் விதிக்கப்படாது. மேலும் மானியமும் தடை படாது. எனவே ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications