அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் தொகை முடக்கம்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி திடீரென சோதனை நடத்தியது. அதேபோல சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத் இந்தச் சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது. இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications