சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு நாளை (மே 6ம் தேதி) முதல் மே 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Recommended Video

    #BREAKING புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    The public is not allowed to travel on Chennai suburban trains from tomorrow

    ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்களப் பணியாளர்கள் (மருத்துவ பணியாளர்கள்), மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்

    கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    The public is not allowed to travel on Chennai suburban trains from tomorrow

    ஏற்கனவே மே 1ம் தேதியில் இருந்தே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்பகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் பயணிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The public is not allowed to travel on Chennai suburban trains from tomorrow to may 20 th . only hospital workers , govt employees and lawyers and press people can travel in local train in chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X