சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த அதிரடி ஆஃபர் இன்று முதல் அமல்
சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வாகன நிறுத்த கட்டண தள்ளுபடியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக ரயில் இயக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இதனையடுத்து கட்டண சலுகை, பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில், அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வாகன நிறுத்த கட்டண தள்ளுபடியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது, "சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 14.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும்போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையைப் பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் (https://chennaimetrorail.org./parking-tariff/), மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Banners) மற்றும் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பணியாளர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்" என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. இந்த கட்டண தள்ளுபடியானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications