தமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. பின்னணியில் சோமாலியா.. புது கிளைமேட்டிற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது.
இது தொடக்கத்தில் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகமாக குறைந்தது
சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 11 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. சென்னையில் சில இடங்களில் 9 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சிதான் இதற்கு காரணம் ஆகும். இது தற்போது இந்தியாவில் உள்ள குளிரான காற்றை இழுத்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் உள்ள காற்று தென்னிந்தியா வழியாக செல்கிறது. இந்த குளிரான காற்று தமிழகத்தை கடப்பதால் இங்கு வெப்பநிலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்கள்
இதனால் மற்ற தென்மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் இதனால் பெரிய அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. 7 டிகிரி செல்ஸியஸ் வரை கேரளாவில் வெப்பநிலை குறைந்து இருக்கிறது. எப்போதும் குளிராக இருக்கும் பெங்களூரில் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

எவ்வளவு நாள்
இன்னும் ஐந்து நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இந்த காற்று முழுதாக கடக்கும் வரை வெப்பநிலை குறைந்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த குளிர் காற்று காரணமாக இந்த வருடம் மழை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications