தரமான சம்பவம்.. வீட்டு லோன் கட்டுறீங்களா? வட்டி குறையுது.. அதிரடியாக குறைக்கப்பட்ட ரெப்போ ரேட்
சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவிக்க உள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரெப்போ ரேட் விரைவில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறையும் வட்டி
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது
மாற்றங்கள் வரும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உயர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியபோது, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் வட்டியும் இஎம்ஐ செலுத்தும் காலமும் உயர்ந்தது. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது, உலகளவில் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் சமீபத்தில்தான் வட்டியை குறைத்தது. உலகளாவிய போக்கை ஆர்பிஐ பின்பற்ற வேண்டும். மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் 250 பிபிஎஸ் புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் ஆர்பிஐ உயர்த்தியது. கடைசியாக 2020 மே மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக 25 பிபிஎஸ் புள்ளிகளை ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் குறைத்துள்ளது. இதனால் உங்களின் இஎம்ஐ அல்லது இஎம்ஐ காலம் குறையும்.
லோனில் மாற்றம்
அதே சமயம் இது பர்சனல் லோனில் மாற்றத்தை ஏற்படுத்தாது. இதனிடையே புதிய தனிநபர் கடன் விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனி நபர் கடன் வாங்குவதை.. அதாவது பர்சனல் லோன் எடுப்பதை இந்த நடவடிக்கை கடினமாக்குகிறது. ஜனவரி 1, 2025 முதல், வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கைகளை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் நிதிநிலையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்யலாம். அதாவது துல்லியமாக சிபில் ஸ்கோரை கணக்கிட முடியும். இந்த நடவடிக்கையானது அதிக அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் வாங்குபவர்கள் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்கும். மாத தொடக்கத்தில் ஏதாவது தவறு செய்தால் அது அடுத்த மாதம் உள்ள சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கலாம்.. 2 வாரங்களிலேயே பிரதிபலிக்கும்.
லோன் இஎம்ஐ மாற்றம்
இன்னொரு பக்கம் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இஎம்ஐ செலுத்துவதில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மாதாந்திர தவணைகள் (இஎம்ஐக்கள்) மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும். வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் மீதான எதிர்பாராத கட்டணங்களை, மாற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications