சேது கால்வாய் வந்தால்.. சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி மாறிவிடும்: பாமக ஜி.கே.மணி
சென்னை: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்று பேசிய அவர், சேது சமுத்திர திட்டம் மட்டும் வருமேயானால் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வளர்ச்சி அடையக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தின் மூலம் போக்குவரத்து நேரம் 30 மணி நேரம் வரை குறையும் என்றும் ஒரு பெரிய திட்டம் வரும் போது தொலைநோக்கு பார்வை அவசியம் எனவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சேது சமுத்திரம்
தமிழக சட்டசபையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்று பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை இந்திய திருநாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய திட்டம் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் கடலோர காவல்படைகள் பலப்படுத்தப்பட்டு இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட சேது சமுத்திர திட்டம் வழிவகுப்பதாக தெரிவித்தார்.

ஏற்க வேண்டும்
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஜி.கே.மணி, இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சட்டசபையிலேயே வேண்டுகோளும் விடுத்தார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசும், முதலமைச்சரும் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி பக்கபலமாக நின்று ஆதரவளிக்கும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு இணையாக
மேலும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என அவர் பேசியதோடு தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வளர்ச்சி அடையக் கூடும் எனவும் கூறினார். 167 கிலோ மீட்டர் தொலைவுக்கு 12 மீட்டர் ஆழம், 300 மீட்டர் அகலம் என்ற அளவில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் போது பவளப்பாறைகள் அழிப்பு உள்ளிட்ட சில பாதகங்கள் இருந்தாலும் தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டத்தை அனுக வேண்டும் எனக் கூறினார்.

மொத்தத்தில் ஆதரவு
மொத்தத்தில் முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாமக ஆதரவாக நிற்கும் எனக் கூறிவிட்டு அமர்ந்தார். இவரைப் போலவே விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷாநவாசும், சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்று பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications