தமிழக வரலாற்றில் புதிய சாதனை படைத்த பத்திரப்பதிவு துறை.. ஒரே ஆண்டில் குவிந்த வருமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில் தமிழக வரலாற்றில் ஒரு சாதனையாக, பத்திரப்பதிவு துறை வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கிறது என்கிறார்கள். இந்த மாதம் முடிய இன்னும் நாட்கள் உள்ளதால் பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால், நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு பரிவர்த்தனைகள் அதே அளவில் நடக்கிறது. ஏனெனில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறைத்தான் நிலம், வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்கிறது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவது வழக்கம்.

the revenue of the deed registration department has crossed Rs 20000 crores

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாகவே அரசின் கருவூலத்துக்குத் தேவையான அதிக வரி வருவாய் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.

இந்நிலைலயில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் அரசுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவு என்று கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.18 ஆயிரத்து 800 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை விஞ்சி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை நேற்று எட்டி பிடித்திருப்பதாக பத்திரப்பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆண்டு கணக்கு முடிவு மாதம் என்பதால் மாசி மாதத்தில் அதிக அளவிலான பத்திரப்பதிவுகள் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருகிறது.. இதன் காரணமாக இந்த மாதத்தில் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த 2024-25-ம் நிதியாண்டில் இதுவரை 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இந்த நிதியாண்டு, அதாவது மார்ச் மாதம் முடிய இன்னும் 17 நாட்கள் இருப்பதால் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+