கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இன்று தொடங்கி 3 நாட்களை மிஸ் பண்ணிடாதீங்க.. முக்கியமான நாட்கள்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று தொடங்கி, ஆகஸ்ட் 20ம் தேதியான வரும் ஞாயிறு வரை நடக்கிறது. இந்த முகாம்களை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டப்படி ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. எனவே வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை எப்படி முகாம்கள் நடைபெறும் என்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்திட மொத்தம் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,730 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்றன.
மீதமுள்ள 724 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,781 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. இதற்காக முன்கூட்டியே தேவையான விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2 கட்டங்களாக நடந்த முகாம்கள் மூலமாக 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் விடுபட்டவர்களுக்கு 18-ந்தேதி (இன்று) முதல் 20-ந்தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடந்த இடங்களிலேயே இந்த முகாம்களும் நடைபெற உள்ளது. இதுகுறித்த விவரங்கள் ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பப் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வாருங்கள். நீங்கள் விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்த சான்றுகளையும் நீங்கள் எடுத்துவர தேவையில்லை.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் அந்தந்த மண்டல அலுவலக கட்டுப்பாட்டு எண்களிலும் தொடர்புகொள்ளலாம்." இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications