தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்த சினிமா பிரபலங்கள் கதை! 52 ஆண்டு கால அரசியல் வரலாறு!
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார் நடிகர் விஜய்.
இவருக்கு முன்னாள் 10க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரை தவிர மற்றவர்களால் அதிகபட்சம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக வரை மட்டுமே ஆக முடிந்தது. விஜயகாந்த் உட்பட வேறு யாராலும் அவர்கள் நினைத்தபடி தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.

1972ஆம் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயரை அப்டேட் செய்து கொண்டார். இறுதி மூச்சு வரை முதலமைச்சராகவே வாழ்ந்து மறைந்தார். இதற்கு காரணம் இவர் மக்களின் மனதை வென்று ஆட்சி புரிந்தார்.
1989ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பு சிவாஜி கணேசணுக்கு கிடைக்கவில்லை. இதன் விளைவாக திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரினிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் சிவாஜி கணேசன். அத்தோடு அரசியலுக்கு முழுக்கும் போட்டுவிட்டார்.
அதே 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனி அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் பாக்யராஜ். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்து கரையேறிவிடலாம் என்ற இவரது கனவு கானல் நீரானது. ஓரிரு ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் சென்றுவிட்டார் பாக்யராஜ்.
திமுகவின் அனுதாபியாக, குறிப்பாக கருணாநிதியின் ஆதரவாளராக வலம் வந்த டி.ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அதனை கலைத்து மீண்டும் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து மீண்டும் இப்போது பெயரளவில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். பெரியளவில் எந்த செயற்பாடும் இல்லை.
2005ஆம் ஆண்டு மறைந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். அரசியலில் விறுவிறுவென வளர்ந்து வந்த விஜயகாந்த், கட்சி ஆரம்பித்ட 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரானார். 20, 30 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தும் தலைவர்களுக்கு கூட கிடைக்காத அரிய வாய்ப்பாக கருதப்பட்டது. இந்நேரம் அரசியலில் பல உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரது கட்சியும் முடங்கும் நிலைக்கு சென்றது. இப்போது விஜயகாந்த் மறைந்தாலும் கட்சிக்கு புத்துயிர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
திமுக, அதிமுக என ஒரு ரவுண்ட் அடித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த சரத்குமார் 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். பொருளாதார ரீதியாக கட்சி நடத்த பெரிய பேக்கிரவுண்ட் வேண்டும் என்ற நிலையில் சமத்துவ மக்கள் கட்சி வெறும் அறிக்கை கட்சியாக மட்டுமே உள்ளது.
2009ஆம் ஆண்டு நவரச நாயகன் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அந்தக் கட்சியை பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் எங்கும் பார்க்க முடியாது. அவரைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிகள் படை என்ற பெயரில் தனி அரசியல் கட்சி தொடங்கினார். சசிகலா கருணையால் 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தலிலும் கமல் கட்சியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. பல முன்னணி நிர்வாகிகள் கமல் கட்சியை விட்டு ஓடம் பிடித்த நிலையில், இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஐக்கியமாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் மன்சூர் அலிகான் லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்தார். அதனை அவரே மறந்திருப்பார், அந்தளவுக்கு தான் அதன் செயல்பாடு உள்ளது.
இப்படியாக சினிமா பிரபலங்கள் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்த நிலையில் இப்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். போல் முதலமைச்சராக வேண்டும் என்ற வேட்கையுடன் அவரது நகர்வுகள் அமைந்துள்ளன. காலமும் சூழலும் சாதகமாக அமைந்தால் விஜய் சாதனை படைக்க முடியும்.
-
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!








Click it and Unblock the Notifications