வேளச்சேரி ரயில் நிலையம் முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை அதிரடியாக மாறிய காட்சிகள்
சென்னை: வேளச்சேரி ரயில் நிலையம் கடந்து மேம்பாலம் இறங்கினால் பள்ளிக்கரணையில் கைவேலி சந்திப்பு வரும் இடம் முதுல் மேடவாக்கம் கூட்ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டி வந்தார்கள். குறிப்பாக கைவேலி சந்திப்பு முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை நடைபாதைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகள் காரணம் என்று புகார் எழுந்தது. அவற்றை தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை போலீசார் அகற்றி உள்ளனர்.
சென்னையில் அடையாறு தாண்டி, இந்திரா நகர் தொடங்கி, திருவான்மியூர் ஐடி பார்க், பெருங்குடி, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, ரேடியல் சாலை, சோழிங்கநல்லூர் மற்றும் நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிக அளவில் அமைந்துள்ளன.

ஐடி ஊழியர்கள் கிண்டி மற்றும் அண்ணா சாலை செல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலையில் தான் வேளச்சேரியை தாண்டி செல்ல வேண்டும். அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வழியாகவே செல்ல வேண்டும்.
ஆனால் வேளச்சேரி ரயில் நிலையத்தைதாண்டி, மேம்பாலம் கடந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையை நோக்கி செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அங்கு நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் முக்கிய காரணம் என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், துரைப்பாக்கத்தை இணைக்கும் முக்கியமான இந்த சாலையில், காய்கறி வாங்க செல்வோர், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்வதால், பீக் அவர்ஸ் என்று அழைக்கப்படும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
எனவே கைவேலி முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதேபோல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை தாண்டி, மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பு வரை சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் வாகனங்கள் காலையிலும், மாலையிலும் செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் செல்வோர் இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரிமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்நிலையில் வேளச்சேரி ரயில் நிலையம் தொடங்கி பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை பள்ளிக்கரணை போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.
This is how the road should be. Thanks @COPTBM https://t.co/gueLdfwULf pic.twitter.com/08OkS8ySaM
— 🇮🇳 Vidyasagar Jagadeesan🇮🇳 (@jvidyasagar) September 21, 2025
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications