இந்த முறையும் சாதித்துவிட்டாரே! விக்ரம் லேண்டர் இறங்கும் முன்பே! அதன் இடத்தை சரியாக கணித்த தமிழர்!
சென்னை: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முன்பே அது தரையிறங்கும் இடத்தை ஷண்முக சுப்ரமணியன் என்ற தமிழர் ஒருவர் துல்லியமாக கண்டித்துள்ளார்.
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிய போது அதை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. இந்த முறை சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலையில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளார்.

துல்லியமாக கண்டுபிடித்தார்: கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. அப்போது இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.
விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இயக்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.
இதனால் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அப்போது எந்த விதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.
கண்டுபிடித்த தமிழர்: அதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் 2019 டிசம்பர் மாதம் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.ஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.
நிலவில் சில பகுதிகளை குறிப்பிட்டு, இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாசா அதே இடத்தில் மீண்டும் சோதனை செய்தது. கடைசியில் அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
நாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் LROC மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.
மீண்டும் சாதனை: இந்த நிலையில்தான் தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கி உள்ளது. அதேபோல் பிரக்யான் ரோவரும் நிலவில் இறங்கி உள்ளது. இதை புகைப்படத்தை இன்று இஸ்ரோ வெளியிட்டது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முன்பே அது தரையிறங்கும் இடத்தை ஷண்முக சுப்ரமணியன் துல்லியமாக கண்டித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் சந்திரயான் 3 குறித்த ஆய்வில் ஷண்முக சுப்பிரமணியன் கலக்கி உள்ளார்.
தரையிறங்கும் இடம் என்று நிலவில்: -69.37302, 32.32017 (in a 10x10m box) பகுதியை அவர் குறிப்பிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டதற்கு 50 மீட்டருக்கும் அருகில் மிக துல்லியமாக விக்ரம் லேண்டர் களமிறங்கி உள்ளது. தான் கணித்த இடத்தையும், நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்தையும் ஒப்பிட்டு அவர் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
எப்படி இறங்கியது: நேற்று முதல்நாள் மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. லேண்டர் மாடுல் நிலவை நோக்கி இறக்கப்பட்டது. ரப் பிரேக்கிங் மற்றும் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இந்த விக்ரம் களமிறக்கப்பட்டது. இதில் 30 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக தரையிறக்கப்பட்டது. 11.5 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் 7.4 கிமீ உயரம் வரை கொண்டு வரப்பட்டது. 1.68km கிமீ / நொடி என்ற வேகத்தில் இந்த லேண்டர் களமிறங்கியது. அதன்பின் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இதன் உயரம் 6.5 கிமீ உயரம் குறைக்கப்பட்டது.
அதன்பின் இதன் உயரம் மேலும் ஏஎல்எஸ் மூலம் ஆட்டோமேட்டிக் லேண்டிங் சிஸ்டம் மூலம் திரஸ்டர்கள் உதவியுடன் குறைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக் முறையில் இறங்கியது. இதில் இஸ்ரோ எந்த கமெண்டும் கொடுக்கவில்லை. 3 நிமிடங்கள் இது தொடர்ந்தது. 800 மீட்டர் உயரத்தை அடையும் அடையும் வரை கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் திரஸ்டர்கள் உதவியுடன் இதன் உயரம், வேகம் குறைக்கப்பட்டு ஏஎல்எஸ் மூலம் லேண்டர் மேலும் கீழே இறக்கப்பட்டது.
கடைசியாக 10 மீட்டர் உயரம் இருக்கும் வரை விக்ரம் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகளுக்கு இடையிலேயே கேமரா உதவியுடன் நிலவில் எங்கே இறங்க வேண்டும் என்று லேண்டர் கண்டுபிடித்தது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட லோகேஷன் சரியில்லை என்பதால் இரண்டாவதாக மீண்டும் லோகேஷனை தேடியது. கடைசியில் கண்டுபிடித்த 10 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட லேண்டர் அங்கிருந்து ப்ரீ பாலிங் மூலம் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
எப்படி நடந்தது?: சந்திரயான் 2 லேண்டரில் 5 திரஸ்டர்கள் இருந்தன. ஒன்று செயல் படமால் போனால் பாதுகாப்பிற்கு 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. ஆனால் கூடுதல் திரஸ்டர்கள் இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருப்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே உள்ளன.
முன்பு சந்திராயன் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் முதலில் 2 திரஸ்டர்கள் செயல்படும். அவை செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும். அப்படித்தான் இன்று திரஸ்டர்கள் திட்டமிடப்பட்டபடி இயங்கியது.
#Chandrayaan3's Final landing location: -69.37302, 32.32017 (in a 10x10m box) | Calculated from ISRO's video (1/5) pic.twitter.com/GfHjD4A5NJ
— Shan (Shanmuga Subramanian) (@Ramanean) August 24, 2023
கேமரா இருக்கும்: முன்பு சந்திரயான் 2 சிக்னல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும். இதை வைத்தே ரோவர் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்தோம். ஆனாலும் சிக்னல் போனால் ரோவருக்கு என்ன ஆனது என்று தெரியாது. மாறாக சந்திரயான் 3ல் கேமரா இருக்கும். இவை ஒவ்வொரு மீட்டருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்பும்.
இதனால் ரோவர் எங்கே செல்கிறது எப்படி செல்கிறது என்று தெரியும். அதோடு நிலவின் தரைப்பகுதியில் பெரிய கல் இருந்தால் ரோவரை தள்ளி நகர்ந்து தரையிறங்க வைக்க முடியும். கேமரா மூலம் ரோவரை இனி சிறப்பாக கணிகாணிக்க முடியும். இந்த முறை சந்திரயான் 3ல் உள்ள சென்சார் மற்றும் கேமரா காரணமாக பாறைகளை தவிர்த்துவிட்டு சமதளத்தில் ரோவர் களமிறங்க முடியும். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications